உலகம்

சீனாவின் ‘கொரோனாவேக்’ தடுப்பூசி இளம் வயதினருக்கு பாதுகாப்பானது :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீஜிங்:

கொரோனா வைரஸ் தொற்றை உலகத்துக்கு பரப்பிய சீனா 3 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. சைனோவேக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசிக்கு ‘கொரோனாவேக்’ என்று பெயர்.

கொரோனா தடுப்பூசி முகாம் || Tamil News Corona vaccination camp

இந்த தடுப்பூசியை 550 இளம் வயதினருக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.இந்த தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களில் 96 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.லேசான அல்லது மிதமான பக்க விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஊசி போட்ட இடத்தில் ஏற்பட்ட வலிதான் பெரும்பாலும் பக்க விளைவாக தெரிய வந்துள்ளது.

ALSO READ  நாடு கொடுமையான சூழலை சந்தித்துள்ளது : சீன அதிபர் ஜி ஜின்பிங்
Maalaimalar News: Tamil News 1.92 crore vaccines in stock of states -  Federal Government

ஒரே ஒருவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.மொத்தத்தில் இந்த தடுப்பூசி, 3 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு பாதுகாப்பானது, பயனுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.இந்த தகவல்கள் ‘லேன்செட்’ தொற்று நோய்கள் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் வரமாட்டேன்…. அடம்பிடித்த சர்க்கஸ் யானை

Admin

செப்டம்பர் 22: உலக காண்டாமிருகங்கள் தினம்

News Editor

2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்படுகிறது

News Editor