உலகம்

இஸ்ரேலுக்கான சீன தூதர் இஸ்ரேலில் மர்ம மரணம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல் அவிவ்:-

இஸ்ரேலுக்கான சீன தூதர் டு வெய் (Du Wei), அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இஸ்ரேலுக்கான சீன தூதராக இருந்தவர் 58 வயதான டு வெய். கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், அவர் கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான தூதராக பணியமர்த்தப்பட்டார். முன்னதாக உக்ரைனுக்கான சீன தூதராக பணியாற்றியவர் ஆவார். 

இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவில் நகரில் உள்ள ஹர்ஸ்லியா (Herzliya)ல் உள்ள வீட்டில் அவர் உயிரிழந்து கிடந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அவரது இறப்பிற்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. டு வெய்க்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆனால் அவர்கள் இஸ்ரேலில் வசிக்கவில்லை என கூறியுள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸ் பரவல் பதுங்குகுழிகளை திறக்கும் இஸ்ரேல் அரசாங்கம்....

இஸ்ரேல் மற்றும் சீனாவுக்கு இடையே நல்ல உறவு உள்ளது. 

இஸ்ரேலுக்கான சீன தூதர் டு வெய் இறப்பதற்கு இரு தினங்களுக்கு கொரோனா தொடர்பாக சீனா உண்மையான தகவல்களை வெளியிடவில்லை எனவும், இஸ்ரேலில் சீனா செய்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்திருந்தார்.

ALSO READ  கொரோனா ஊரடங்கு: தனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவும் மக்கள்… 

அதற்கு டு வெய் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த  இரண்டு நாட்களுக்குள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது சீனா மற்றும் இஸ்ரேலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

20 நிமிடத்தில் நொறுங்கிய ரூ.2 கோடி மதிப்புள்ள கார்…

naveen santhakumar

சொந்த கணவரை மீண்டும் திருமணம் செய்த பெண் – எதற்கு தெரியுமா?

Admin

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

News Editor