உலகம்

கொரோனா வைரஸை முதன்முதலில் கண்களால் கண்ட பெண் மருத்துவர்… அது குறித்து அவரது பேட்டி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹூபே:-

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபே-ல் உள்ள வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது?? என்று தெரியாமல் அனைத்து உலக நாடுகளும் திணறி வருகிறது.

ஒருபுறம் இந்த வைரஸை சீனா தனது ஆய்வகங்களில் உருவாகி உலகம் முழுவதும் பரப்பியது என்றும், சீனா Bio-War செய்வதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகிறது. 

ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. அதோடு அமெரிக்க ராணுவம் தான் தங்கள் நாட்டில் இவ்வாறு செய்ததாக கதையும் கூறி வருகிறது.

இந்நிலையில் முதன்முதலில் இந்த வைரஸை  கண்டறிந்தவர் என்று வூஹான் நகரில் உள்ள மருத்துவமனையில் சுவாச நோய் சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் Dr Zhang Jixian என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவை முதன் முதலில் கண்டறிந்த அந்த பெண் மருத்துவர் அது குறித்த அனுபவங்களை சின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி வயதான பெண்மணி ஒருவர் அவருக்கு இருமல் மற்றும் சுவாச கோளாறு காரணமாக எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அப்பொழுது அவருடன் வந்த கணவருக்கு உடல் நடுக்கம் இருந்தது. இதேபோல் அவர்களது மகனுக்கும் நுரையீரல் பாதிப்பு இருந்தது.

முதலில் இதை நாங்கள் நிமோனியா காய்ச்சல் அல்லது ஃபுளு காய்ச்சல் என்று நினைத்தோம். ஆனால் CT ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் அவர்களது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ALSO READ  கொரோனா பரவல்: உலகின் பாதுகாப்பான நாடு எது..??

CT ஸ்கேன் பரிசோதனை மூலமாக இது ப்ளூ காய்ச்சல் அல்லது நிமோனியா இல்லை வேறு ஏதோ வைரஸ் தொற்று என்பதை நாங்கள் கண்டறிந்தோம். மேலும் அந்தத் தம்பதிகளின் மகனுக்கு மிக மோசமாக வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதையும் கண்டறிந்தோம்.

முதலில் அவர்களுடைய மகன் இந்த பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. மருத்துவமனை நிர்வாகம் பணம் பறிப்பதற்காக இது போன்ற பரிசோதனைகளை தம்மை உட்படுவதாக அவர் கூறினார். எனக்கு முன்னரே 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் போன்ற வைரஸ் தொற்று குறித்து அனுபவம் இருந்ததால் அவரை நாங்கள் கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன்.

அதன் பின்னர் மூவருக்கும் வைரஸ் தொற்று இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம். இதேபோல மறுநாள் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றொரு நபர் மேற்கண்ட அறிகுறிகளுடன் வந்தார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் அவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த நால்வருக்கும் மேற்கொண்ட சோதனை முடிவுகளில் இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதை உணர்ந்தேன். இது ஏதோ புது வகையான நோய்தொற்று ஒன்று உருவாகி இருப்பதை உணர்ந்து உடனடியாக நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் அனுப்பினேன். ஆனால் அப்போது நினைக்கவில்லை இத்தனை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் என்று.

இதையடுத்து அந்த நால்வரும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களை கண்காணிக்கும் மருத்துவர்கள் மற்றும் இதர ஊழியர்களை பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு சொல்லி வற்புறுத்தினேன்.

ALSO READ  வீடுகளில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

டிசம்பர் 30ஆம் தேதி வூஹான் நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் நிமோனியா போன்ற புதுவிதமான நோயொன்று  ஏற்பட்டிருப்பது குறித்து எச்சரிக்கை செய்தோம். 

இதையடுத்து டிசம்பர் 31ஆம் தேதி சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (NHC) பூங்கா நகரில் உள்ள அனைவரும் கட்டாயமாக அணிய வேண்டுமென்றும், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் செய்தி அனுப்பியது.

அதோடு வூஹான் நகரில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. அதோடு டிசம்பர் 31ம் தேதியே உலக சுகாதார நிறுவனத்திற்கு நோய்தொற்று ஒன்று உருவாகி இருப்பது குறித்து எச்சரிக்கையை அனுப்பி விட்டோம் என்று கூறினார்.

முதலில் சீனா இந்த நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்று மறுத்து பின்னர் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்பது இது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இல்லை என்றது பிறகு வவ்வால்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவியது என்று இந்த நோய் குறித்து முதன்முதலில் எச்சரிக்கை செய்த டாக்டர்  சீனா அரசாங்கத்தால் மிரட்டப்பட்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார் அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் உயிரிழந்தார் அதோடு இந்த நோய் பரவல் குறித்து முன்பே எச்சரிக்கை விடுத்த விடுத்து உழைப்பாளர்கள் பலர் காணாமல் போயுள்ளனர் குறிப்பாக இந்த நோய் முதன் முதலில் கண்டறிந்த கூறப்படும் பெண் மருத்துவர் ஒருவர் தற்போதுவரை எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தைகளின் ஆபாசப்படங்களும் அதிரடி நடவடிக்கைகளும்…

Admin

267 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட டேட்டா கசிந்து…

Admin

நீங்கள் ஒன்னும் கவலைப்படாதீங்க டிரம்ப்….உங்களுக்கு நாங்க வேலை கொடுக்குறோம்….

naveen santhakumar