உலகம்

10 பீர்… போதை உறங்கம்… சிறுநீர்பை வெடிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸேஜியாங்:-

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் அசால்டாக 10 பீர் குடித்துவிட்டு தூங்கியுள்ளார். நீண்டநேரம் சிறுநீரை அடக்கியதால் சிறுநீர்ப்பை கிழிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சீனாவின் மேற்கு ஸேஜியாங் (Zhejiang) மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ (40) (Hu). பத்து பீர்கள் குடித்த ஹூ சிறுநீர் கழிக்காமல், 18 மணிநேரம் வரை அடக்கி வைத்துள்ளார். இதனால் இவரது சிறுநீர் பை கிழிந்து, ஹூஜி பொது மருத்துவமனையில் (Zhuji People’s Hospital) அனுமதிக்கப்பட்டார். 

ALSO READ  கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்து சோதனை இன்று தொடக்கம்....

பத்து பீர்கள் குடித்த ஹூ கழிவரை செல்லாமல், நாள் முழுவதும் தூங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் இவரது சிறுநீர்ப்பை 3 இடங்களில் இடங்களின் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஹூவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கிழிந்த சிறுநீர்ப்பை எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாமல் சரிசெய்யப்பட்டது. தற்போது ஹூ நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

ALSO READ  சீனாவின் ஜியோமி உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்ப்பு…...அமெரிக்கா அதிரடி…..

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில்:-

மனித சிறுநீர்ப்பை ஒரு பலூன் போன்றது. நாம் எந்த அளவிற்கு திரவத்தை உட்கொள்கிறோமோ அந்த அளவுற்கு விரிவடையும். பொதுவாக மனித சிறுநீர்ப்பை 350- 500 மில்லி லிட்டர் வரை தாங்கும் திறன் கொண்டது. இதைவிட அதிகளவு திரவம் சேர்ந்தால் சிறுநீர்ப்பையில் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து 90,000விலங்குகள் உயிருடன் மீட்பு

Admin

மக்கள் வறுமையில வாடுறாங்க…..இப்போ நாய்-க்கு தங்கத்துல சிலை வைக்கிறது ரொம்ப முக்கியமா????

naveen santhakumar

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!

Shanthi