உலகம்

மூன்றாவது முறையாக அமெரிக்காவின் செனட் உறுப்பினராக தேர்வான தமிழகத்து தாரகை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா:

அமெரிக்க தேர்தலில் தமிழ்ப்பெண்ணான பிரமிளா ஜெயபால் செனட் உறுப்பினராக மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார். பிரமிளா ஜெயபாலின் பூர்விகம் தமிழ்நாடு  ஆகும். இவர் சென்னையில் பிறந்தவர். கல்விக்காக சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றார்.இவரின் கணவர் பெயர் ஸ்டீவ் வில்லிம்சன். தம்பதிக்கு ஜனக் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் தான் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில் அது குறித்து பிரமிளா டுவிட்டரில், “இந்த நாட்டில் அதிகாரம் ஒரு ஜனாதிபதி அல்லது ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல, மக்களுக்கு சொந்தமானது. நம் வாக்குகள் எண்ணப்படும், நமது குரல்கள் கேட்கப்படும்” என பதிவிட்டிருந்தார்.கடந்த முறை இவர் MP-யாக இருந்தபோது செய்த ஒரு சம்பவம் தமிழர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ALSO READ  நீண்டதூரம் பயணிக்கும் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையின் சோதனையை நடத்திய வடகொரியா..!

அதாவது கூகுள் CEO சுந்தர் பிச்சை, தமிழரான இவர் கூகுள் மீது அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அமெரிக்க நாடாளுமன்றக் குழு முன் ஆஜராகினர்.அப்போது நாலாபுறமும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் சுந்தர் பிச்சையை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைச்சல் கொடுக்க, ஒரே ஒருவர் மட்டும் வாழ்த்து சொல்லி செனட் சபையை ஆச்சர்யப்படுத்தினார். அது வேறு யாருமில்லை அவர்தான் பிரமிளா ஜெயபால்.

சுந்தர் பிச்சை நீங்கள் பிறந்து வளர்ந்த அதே தமிழகத்தில் தான் நானும் பிறந்தேன்.CEOஆக இருந்து கூகுளை நீங்கள் வழிநடத்திச் செல்வதை காணும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகின் மிக முக்கியமான இருவேறு பொறுப்புகளில் நாம் இருவரும் பதவி வகித்து வருகிறோம் என்பதில் பெருமைப்படுகிறேன் என பேசி ஆச்சரியப்படுத்தினார் பிரமிளா.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

கலிஃபோர்னியா கடலில் காணப்பட்ட அரிய வெள்ளை டால்பின்கள் மற்றும் பெலுகா திமிங்கலம்… 

naveen santhakumar

ப.சிதம்பரத்தை ஊழல் அரசியல்வாதி என விமர்சித்த ”The Diplomat” பத்திரிக்கை

naveen santhakumar