உலகம்

பிரிட்டன் விமான போக்குவரத்துக்கு தடை : ரஷ்யா அறிவிப்பு  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கரோனா தற்போது மரபியல் மாற்றம் அடைந்து வீரியமிக்க கரோனா வைரஸின் புதிய வகை வேகமாக  பிரிட்டன் முழுவதும் பரவி வருகிறது . ஆகையால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறத்து பிரிட்டன் அரசு. உலகையே  தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை விட 70 % வேகமாக பரவுகிறது புதிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் மீண்டும் கடுமையான  கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாற்றமடைந்த  புதிய வகை வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிட்டன் விமானம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு கரோனா பரவலை தடுத்து நிறுத்தும் பொருட்டு பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் தடை அமலுக்கு வருவதாகவும் நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ரஷ்ய தரப்பில் இருந்து கூறப்படுகிறது. புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால் மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது


Share
ALSO READ  கொரோனா வைரஸை பரப்பியதற்காக, சீனாவிடம் நஷ்ட ஈடு கோரும் ஜெர்மனி...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா மரணங்கள்.. பிரம்மாண்ட குழிகள்… தயாராகும் லண்டன் கல்லறைகள்….

naveen santhakumar

ஒரு வீட்டின் விலை 9 கோடி – உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியல் வெளியீடு

News Editor

கூடிய விரைவில் கொரோனா தடுப்பூசி:

naveen santhakumar