உலகம்

நாளை முதல் ஓமன் நாட்டில் இலவச கொரோனா தடுப்பூசி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மஸ்கட்:

ஓமன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது முதியவர்கள் மற்றும் நெஞ்சக நோயுடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மஸ்கட்டில் உள்ள ஓமன் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்.

ALSO READ  இந்தோனேசிய நாட்டில் கடுமையான நிலநடுக்கம்....

அதேபோல் அல் செஹல் சுகாதார மையத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தடுப்பூசி போடப்படும். சீப் பகுதியில் உள்ள டிரைவ் த்ரூ மையங்களில் வெள்ளி, சனிக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.சுகாதார அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நாளை முதல் இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ள “தாராசுத் பிளஸ்” என்ற செயலியில் வசதி செய்து தரப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானில் 14 பேர் மரணம்- பலர் மருத்துவமனைகளில் அனுமதி.

naveen santhakumar

NASA-வின் அதிர்ச்சி அறிக்கை…..இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்…..

Shobika

கொரோனாவிற்கு அடுத்து குரங்கு பி வைரஸ்…! சீனாவில் தொடங்கிய புது இன்னிங்ஸ்..!

naveen santhakumar