உலகம்

கொரோனா தொற்றால் ஐக்கிய அமீரகத்திற்கு விமான போக்குவரத்து தடை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில் ஏற்கனவே தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. 

இதனையடுத்து உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து முழுவதும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அண்மையில் மீண்டும் அதனை நீடித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் “இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பாதிப்பால், உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் இருப்பதால் ஜூலை 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து உள்ளதாக கூறினார்.மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனையடுத்து கொரோனா தடுப்பூசி சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்துவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

ALSO READ  'உங்களின் புகழுக்கு பாதிப்பு வந்தபோது நான்தான்...' ஷங்கருக்கு அந்நியன் பட தயாரிப்பாளர் நோட்டீஸ் !

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க  நாடுகளில் கொரோனா அதிகம் பரவுவதால் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடிகளில் இருந்து வரும் விமானத்திற்கு தடை விதித்துள்ளது இங்கிலாந்து அரசு. அதனையடுத்து இந்த நாடுகளுக்கு பயணம் செய்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவில் கொரோனா வைரஸ்-க்கு போட்டியாக ஹண்டா வைரஸ்…

naveen santhakumar

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை பிரிட்டனின் முதல் நீலநிற பாஸ்போர்ட்டை பெற்றுள்ளது….

naveen santhakumar

கிரீஸ் நாட்டில் திடீரென்று நிலநடுக்கம் :

Shobika