உலகம்

இத்தாலியில் 16 மில்லியன் மக்கள் வீட்டைவிட்டு வெளிவர தடை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரோம்:-

இத்தாலியில் Covid-19 காய்ச்சல் (கொரோனா வைரஸ்) காரணமாக நேற்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.

இதையடுத்து வடக்கு இத்தாலியின் வெனிஸ், மிலன், லம்பார்டி, உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சுமார் 16 மில்லியன் மக்கள் வீட்டை விட்டு வெளியேவர தடை விதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பரவியதை அடுத்து சீன அரசு வைரஸ் பரவிய அந்நகரை முற்றிலுமாக தனிமைபடுத்தியது. இதை பின்பற்றி தற்போது இத்தாலியும் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேபோல் சீனாவில் நேற்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 44 பேருக்கும் கோவிட்-19 காய்ச்சல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியுள்ளது; அதேபோல் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,000-ஐ தாண்டியுள்ளது.

ALSO READ  அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கி சூடு-2 பேர் பலி

வைரஸ் பாதித்த நாடுகளில் சீனாவுக்கு அடுத்ததாக தென்கொரியாவில் 7,300, இத்தாலியில் 5,883, ஈரானில் 5,800, ஜப்பானில் 1,159, ஜெர்மனியில் 949, ஸ்பெயினில் 374, ஸ்விட்சர்லாந்தில் 213, அமெரிக்காவில் 206, நெதர்லாந்தில் 188, பெல்ஜியத்தில் 169, ஸ்வீடனில் 140, சிங்கப்பூரின் 138, மலேசியாவில் 99, பெஹ்ரைனில் 77, ஆஸ்திரேலியாவில் 74, இந்தியாவில் 32 பேர் என ஒட்டுமொத்தமாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்1,00,000 தாண்டியுள்ளது உலகளாவிய அளவில் உயிரிழப்புகள் 3700 தொட்டுள்ளது.

ALSO READ  சீன தடுப்பூசியை செலுத்தி கொண்ட இம்ரான் கானுக்கு கொரோனா உறுதி !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் வான் பகுதியில் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை… 

naveen santhakumar

பாகிஸ்தானில் இருந்து காபூலுக்கு முதல் விமானம் வந்தது

News Editor

இலங்கையில் குழந்தை பெற்றெடுத்த ஆண்

Admin