உலகம்

கொரோனாவால் ஆபத்தில் உள்ள 10 நாடுகள்..??? இந்த வருட இறுதியில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரோம்:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு உணவு பஞ்சம் ஏற்படும் போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு முகாமை (UN Food Agency) அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.

இது குறித்து உலக உணவு செயல் திட்டத்தின்  (World Food Programme) தலைவர் டேவிட் பீஸ்லே (David Beasley) கூறுகையில்:-

கொரோனா பரவல் காரணமாக மிகப்பெரிய பஞ்சம் இந்த வருடத்தின் இறுதிக்குள் நிகழவிருக்கிறது. இதனால் உலகம் இந்த வருடம் இரண்டாம் உலகப் போரை விட மிக மோசமான காலகட்டத்தை சந்திக்கப் போகிறது.

உலக அளவில் கிட்டத்தட்ட என் 181 மில்லியன் மக்கள் இரவு உணவு இன்றி தங்களது படுக்கைக்கு செல்கிறார்கள். 135 மில்லியன் மக்கள் மிக மோசமான வறுமையை எதிர்கொண்டு வருகிறார்கள் எதிர்கொண்டுள்ளனர். கொரோன பரவல் காரணமாக 130 மில்லியன் மக்கள் இந்த வருட இறுதிக்குள் மிக மோசமான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.

ALSO READ  இன்று உலகப் பெருங்கடல்கள் தினம்...

உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளும் வெட்டுக்கிளி பூச்சிகளின் படையெடுப்பால் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இயற்கை பேரிடர் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக லெபனான், காங்கோ, சூடான் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் மிக மோசமான பிரச்சனைகளை சந்திக்க போகிறது.

ALSO READ  3வது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி - அமெரிக்க அரசு அறிவிப்பு

உள்நாட்டுக் கலவரம் பொருளாதார நெருக்கடியை காலநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் ஏமன் காங்கோ ஆப்கானிஸ்தான் எத்தியோபியா வெனிசுலா சூடான் தெற்கு சூடான் ஹெய்டி சிரியா நைஜீரியா ஆகிய நாடுகள் அதிக ஆபத்தில் உள்ளன இதில் தெற்கு சூடானில் மட்டும் 61 சதவீத மக்கள் கடந்த ஆண்டு பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நிகழ இருக்கும் பேரழிவை தடுப்பதற்கு அவசர நடவடிக்கை தேவை என்று டேவிட் பீஸ்லே கூறியுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க வாழ் இந்தியருக்கு  வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி..! 

News Editor

‘கொரோனா என்பது வெறும் புரளி’ கோவிட் பார்ட்டியில் கலந்துகொண்ட இளம் பெண்…. 

naveen santhakumar

ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி கிடையாது- சவுதி அரேபியா…

naveen santhakumar