உலகம்

போலி கையில் தடுப்பூசி – வசமாக சிக்கிய சுகாதார ஊழியர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இத்தாலி நாட்டில் சுகாதார ஊழியர் ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமின்றி, தன் போலி கையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு, தடுப்பூசி சான்றிதழ் பெற முயன்றதாக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Italian man tries to dodge COVID 19 vaccine using fake arm |  english.lokmat.com

இத்தாலியைச் சேர்ந்த சுகாதார ஊழியர் ஒருவர், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவதற்காக, தடுப்பூசி போட மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர், தடுப்பூசி செலுத்தும் இடத்தில் உண்மையான கையை போன்றே தோற்றமளிக்கக் கூடிய சிலிக்கான் மோல்டால் மூடிச் சென்றுள்ளார். இதனைக் காட்டி செவிலியரை ஏமாற்றி விடலாம் என அவர் நினைத்துள்ளார்.

ALSO READ  சமூக விலகலை கடைபிடிக்க பிரத்தியேக ஷூ ரெடி…

தடுப்பூசி போடுவதற்காக தோலை தடவியதில், அது ரப்பர் போல இருந்ததால் சந்தேகப்பட்டு அந்த நபரிடம் செவிலியர் கேட்டார். அவரிடம் உண்மையைக் கூறியதோடு, இதனை வெளியில் தெரிவிக்க வேண்டாம் எனவும், ஊசி போடுமாறும் மிரட்டினார். ஆனால் அந்த செவிலியர் இதனை காவல் துறையினரிடம் இது குறித்து தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் வெளியே தெரிந்ததை அடுத்து மோசடியில் ஈடுபட்ட சுகாதார ஊழியரை அதிகாரிகள் அவரை இடைநீக்கம் செய்துள்ளனர். ஒரு சுகாதாரத் துறை ஊழியரே இது போன்ற மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவடைந்தது – பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது – இந்தியாவுக்கு 33 வது இடம்

News Editor

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா உறுதி….

naveen santhakumar

சிறுபான்மையின இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாய கருத்தடை; ஆண்கள் மீது தீவிரவாத முத்திரை…. 

naveen santhakumar