உலகம்

“ஒரு சின்ன குழு.. மொத்த உலகத்துக்கும் ரூல்ஸ் போட முடியாது”.. ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா.. !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

ஜி 7 போன்ற சில நாடுகள் மட்டும் கொண்ட சின்ன குழுவால் ஒட்டு மொத்த உலகையே கட்டுப்படுத்த முடியாது என்று சீனா பகிரங்கமால் தெரிவித்துள்ளது.

Days long gone when small groups decided world's fate, China warns G7 | TRT  World

சீனாவுக்கு போட்டியாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவ, ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.

இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.

G7 summit: Spending plan to rival China adopted - BBC News

சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மாற்றியுள்ள நிலையில், பிரிட்டனில் நடக்கும் ஜி7 மாநாடு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.

ALSO READ  சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்களை நாக்கால் நக்கிய மர்ம நபர்கள் - ஏன் தெரியுமா?...

இந்த, ஜி7 உச்சி மாநாட்டில் சீனாவுக்கு போட்டியாக சில திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை நடத்துகின்றனர்.

அதன்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவ, சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு ரெயில் பாதைகள், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் கட்ட அவற்றுக்கு பொருளாதார ரீதியாக சீனா உதவி செய்து வருகிறது.

ஆனால், இதனால் சில நாடுகள் அதிக கடன் சுமைக்கு ஆளாகும் சூழல் உருவாவதாக விமர்சிக்கப்படுகிறது. எனவே, அதற்கு போட்டியாகவே ஜி7 தலைவர்கள் புதிய திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

பிரிட்டனின் கார்ன்வாலில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள், புதிய திட்டத்தின் மூலம் “கொள்கைகளால் செயல்படும், அதிக தரம் கொண்ட மற்றும் வெளிப்படையான” கூட்டாண்மையை தரவுள்ளதாக தெரிவித்தனர்.

ALSO READ  'கொரோனா என்பது வெறும் புரளி' கோவிட் பார்ட்டியில் கலந்துகொண்ட இளம் பெண்…. 

இந்நிலையில், ஜி7 மாநாட்டை சீனா பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளது. சில நாடுகள் மட்டுமே கொண்ட சிறிய குழுவானது, உலகளாவிய முடிவுகள் தொடர்பாக ஆணையிட்ட காலம் போய்விட்டது என்று லண்டனில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

‘நாடுகள் சிறியதோ அல்லது பெரியதோ, வலுவானதோ அல்லது பலவீனமானதோ, எழை நாடோ அல்லது பணக்கார நாடோ… எல்லோரும் சமம். எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். சர்வதேச முடிவுகளை அப்படித்தான் எடுக்க வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அபாரதத்திற்கு பதில் முத்தம் அளித்த பெண்..!

News Editor

45 ஆண்டு கழித்து கடலில் தரையிறங்கும் ராக்கெட்!…

naveen santhakumar

தீ விபத்தில் சிக்கி 9 கொரோனா நோயாளிகள் உடல் கருகி பலி

naveen santhakumar