உலகம்

தனித்தீவில் குவியல் குவியலாக சடலங்கள் அடக்கம் செய்யப்படும் வீடியோ…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் கொரோனூ நோயால் அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதியாக திகழ்கிறது. இதுவரை 5000-கும் மேற்பட்டோர் இந்த பகுதியில் உயிரிழந்து உள்ளனர்.

பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் அந்த சடலங்களை புதைப்பதற்கு நகருக்கு அருகே உள்ள ஹார்ட் தீவில் (Hart Island) சடலங்களை அடக்கம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி அமர்த்தி உள்ளது.

இந்தத் தீவில் தற்பொழுது ஏராளமான சடலங்களை அடக்கம் செய்யும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஹார்ட் தீவில் 19ஆம் நூற்றாண்டு முதல் யாராலும் உரிமை கோரப்படாத சடலங்களை அடக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஜெயில் கைதிகள் குறைந்த ஊதியத்தில் இந்த சடலங்களை அடக்கம் செய்து வந்தார்கள். 

ALSO READ  புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

இந்த தீவு ப்ரான்ஸ் போரஃப் (Bronx Borough) நகருக்கு அருகே கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ளது. தற்பொழுது இந்தத் தீவில் எப்பொழுதும் சடலங்களை அடக்கம் செய்யும் கைதிகள் பயன்படுத்தப்படாமல் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏனெனில் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ALSO READ  உலகிலேயே இந்த நாட்டில் மட்டும் தான் ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லையாம்... எந்த நாடு தெரியுமா???

கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் அல்லது உறவினர்கள் அதிகாரிகளை 14 நாட்களுக்குள் தொடர்பு கொண்டால் இந்த தீவிற்கு கொண்டு செல்லப்பட மாட்டாது எனவும் சம்பந்தப்பட்டவரின் ஒப்படைக்கப்படும் எனவும் நியூயார்க் நகர Department of Correction-ன் செய்தித்தொடர்பாளர் ஜேசன் கெர்ட்ஸ்டென்  (Jason Kersten) தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூயார்க் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்தியர்!

Shanthi

இதோ வந்துவிட்டது டெல்டா பிளஸ் வைரஸை விட மிக தீவிரமான லாம்ப்டா வைரஸ்…!

naveen santhakumar

2022 க்குள் சீனாவின் தியான்ஹே விண்வெளி நிலையம் பயன்பாட்டுக்கு வர ஏற்பாடு

News Editor