உலகம்

ஆஸ்திரேலியாவில் அதிவேகமாக பரவும் ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிட்னி:

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், மின்னல் வேகத்தில் பரவி வரும் ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவுக்கு ஆஸ்திரேலியாவும் தப்பவில்லை.

Delta Plus has more affinity for lung tissues compared to other Covid-19  strains: NTAGI chief | Deccan Herald

‘டெல்டா பிளஸ்’ கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து ஆஸ்திரேலியாவின் 4 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான ‘பெர்த்’ நகரில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேன் நகரில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ  பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள தடை - உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்
Decoded | Delta Plus variant, India's new worry - Coronavirus Outbreak News

ஏற்கனவே, சிட்னியில் ஜூலை 9-ம் தேதி வரையிலும், டார்வின் நகரில் வரும் வெள்ளிக்கிழமை வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், நியு சவுத் வேல்ஸ் உள்ளிட்ட நகரங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.ஆஸ்திரேலியா முழுவதும் 257 பேர் ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நியு சவுத் வேல்சில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அவசர காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பல்வேறு நகரங்கள் அறிவித்துள்ளன.

Maharashtra: Daily vaccination crosses 1 lakh, turnout low in rural, tribal  areas | Cities News,The Indian Express

ஆஸ்திரேலியாவில் ‘அஸ்ட்ரா ஜெனகா’ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாததால் டெல்டா வகை கொரோனா அதிகமாக பரவுகிறது எனவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி வீசிய இந்திய பெண்:

naveen santhakumar

தொலைந்து போய் ஐந்தாண்டுகள் கழித்து கிடைத்த பூனை- உரிமையாளர் நிகழ்ச்சி

Admin

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..

Shanthi