உலகம்

டைனோசரின் கால் தடத்தை கண்டுபிடித்த 4 வயது சிறுமி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:

டைனோசர் இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்ததாகவும். இயற்கை பேரழிவு மற்றும் பல்வேறு காரணங்களால் டைனோசர் இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் செய்திகள் உள்ளது.இதற்கிடையே சில ஆண்டுகளாக டைனோசரின் புதை படிவம், எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. இதை 4 வயது சிறுமி கண்டு பிடித்திருக்கிறாள்.இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் லில்லி வில்டர் என்ற சிறுமி தனது தந்தை ரிச்சர்ட்டுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

ALSO READ  "நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன்"- கொரோனாவிலிருந்து மீண்ட இந்திய பெண்ணின் அனுபவம்....

அப்போது ஒரு கால் தடத்தை பார்த்த அச்சிறுமி அதுபற்றி தந்தையிடம் கூறினாள். இதையடுத்து ரிச்சர்ட் உடனே நிபுணர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.நிபுணர்கள் அங்கு வந்து காலடித் தடத்தை ஆய்வு செய்தனர். அது சுமார் 22 கோடி ஆண்டுக்கு முந்தைய டைனோசரின் கால் தடம் என்று தெரிவித்தனர்.

இத்தனை ஆண்டுகளாக ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்து இருக்கிறது. இந்த கால்தடம் 10 செ.மீ நீளம் உள்ளது. இது 75 செ.மீ உயரம் கொண்ட டைனோசரின் கால் தடமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். ஆனால் எந்த வகையான டைனோசர்????? என கூற முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்திரேலியாவில் மானத்தை வாங்கிய இந்தியர்..என்ன பண்ணார் தெரியுமா?

Admin

கொரோனா வைரஸை தடுக்க ஐடியா சொன்ன தலாய்லாமா

Admin

இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு …

News Editor