உலகம்

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை பொது விடுமுறையாக அறிவிப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையன்று இனி பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியில் வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும் பெருநாளாக இந்து மக்களால் இந்த பண்டிகை மதிக்கப்படுகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார். இந்நிலையில், பென்சில்வேனியாவில் தெற்காசியாவைச் சேர்ந்த 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாண மேலவையில் செனட்டர்கள் கிரெக் ரோத்மேன் மற்றும் நிகில் சவல் அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை செனட்டர் நிகில் சவல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  சீனாவின் கொடூரங்களை அம்பலப்படுத்தியதற்காக இந்திய வம்சாவளி பெண்ணுக்கு புலிட்சர் விருது..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு..

Shanthi

சிரிச்சா அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

News Editor

இலங்கையில் தமிழர்கள் எழுச்சி போராட்டம்:

naveen santhakumar