உலகம்

இன்று Super Flower Moon-ஐ கண்டுகளிக்க வாய்ப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி, ‘சூப்பர் பிளவர் மூன்’ நிகழ்வு இன்று நிகழ இருக்கிறது . இந்த அரிய நிகழ்வை, மக்கள் சாதாரணமாக பார்க்கலாம். கடந்த மாதம் சூப்பர் பிங்க் மூன் ஏற்பட்ட நிலையில் இந்த மாதம் சூப்பர் பிளவர் மூன் ஏற்பட உள்ளது.

சூப்பர் மூன் நிகழ்வின்போது நிலா தனது பிரகாசத்தில் 30% அதிகமாகவும் அதன் அளவில் 14% அதிகமாகவும் தெரியும்.

சந்திரன், தனது சுழற்சி பாதையில், பூமியில் இருந்து வெகு துாரம் செல்வது, ‘அபோஜி’ என, அழைக்கப்படுகிறது. அப்போது, பூமியில் இருந்து சந்திரன், 4 லட்சம் கி.மீ., தொலைவில் இருக்கும். 

பூமிக்கு மிக அருகில் வருவது, ‘பெரிஜி’ (Perigee) என, அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வின் போது நிலவு பூமியிலிருந்து 3.63 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்

ALSO READ  அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு

இந்த பெரிஜி, பவுர்ணமிக்கு நெருக்கத்தில் வரும் போது, ‘சூப்பர் மூன்’ என, அழைக்கப்படுகிறது. இந்த மாதம், ‘பெரிஜி சூப்பர் பிளவர் மூன்’ என்ற, வானியல் நிகழ்வை இன்று கண்டுகளிக்கலாம்.

நீள் வட்டப் பாதையில், பூமியை சுற்றி வரும் சந்திரன், 27 நாட்களுக்கு ஒரு முறை பூமிக்கு மிக அருகில் வந்து செல்லும். பவுர்ணமி நாளில் நடக்கும் இந்த நிகழ்வு, ‘சூப்பர் மூன், பெரிஜி புளூ மூன்’ என, அழைக்கப்படுகிறது.கடந்த மூன்று மாதங்களாகவே, ‘பெரிஜி புளூ மூன்’ நிகழ்வு நடந்து வருகிறது.

ALSO READ  பாகிஸ்தானின் ஹிந்து கோயிலில் சுவாமி சிலை உடைத்து சேதம் - போலிஸ் வழக்கு பதிவு

இன்று ஆண்டின் நான்காவது, கடைசி நிகழ்வு இன்று நடக்க உள்ளது. இந்த நிகழ்விற்கு ஒவ்வொரு முறையும், ஒரு பெயர் வைக்கப்படுகிறது. இன்று நடக்கும் நிகழ்விற்கு, ‘சூப்பர் பிளவர் மூன்’ என, பெயரிடப்பட்டுள்ளது. இதை, மக்கள் சாதாரணமாக காணலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

சூப்பர் மூன் (Super Moon) என்ற சொல்லை 1979ஆம் ஆண்டு ரிச்சர்ட் நோல் (Richard Nolle) என்ற வானியலாளர் அறிமுகப்படுத்தினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஷாப்பிங் மாலில் திடீரென துப்பாக்கிச் சூடு-8 பேர் காயம்:

naveen santhakumar

ஒரு வேளை தேர்தலில் பிடன் ஜெயித்தால்!!!!!!!!

naveen santhakumar

சீனாவில் மீண்டும் நடனமாடும் கொரோனா:

naveen santhakumar