உலகம்

அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியாக ஆண்களின் அடி மடியிலேயே கை வைத்தது கொரோனா வைரஸ்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


வூஹான்:-

வூஹானை சேர்ந்த மருத்துவர்கள் கொரோனா நோய் தாக்கத்தால் மனிதனின் விந்தனுக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.

சீனாவில் உள்ள மருத்துவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களில் உயிரணுக்களை சோதனை செய்து வருகின்றனர். ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விதைப்பைகள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறி வருகின்றனர.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆண்களின் இனப்பெருக்க திறன் மற்றும் விந்தணுக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் வெளிவரவில்லை.

ஆனால் வூஹானை சேர்ந்த மருத்துவர்கள் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மேலும் கொரோனா வைரஸால் சிறுநீரகமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறி வருகின்றனர்.

ALSO READ  இத்தாலி மற்றும் சீனாவை தாண்டியது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு சிறுநீரகப் பரிசோதனை மற்றும் இனப்பெருக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இங்கிலாந்து ஷேஃபீல்டு பல்கலைக்கழகத்தின் (University of Sheffield) பேராசிரியர் ஆலன் பேசி (Allan Pacey) கூறுகையில்:-

இந்த கொரோனா நோய் மருத்துவம் மற்றும் அறிவியல் சமுதாயத்திற்கு விடப்பட்ட ஒரு சவால் ஆகும். இந்த நோயின் தாக்கம் காரணமாக ஆண்களின் இனப்பெருக்க திறன் பாதிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

ALSO READ  ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல் :

இதுகுறித்து அமெரிக்காவின் எடின்பர்க் பல்கலைக்கழக (University Of Edinburgh) பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப்-ம் (Richard Sharpe)  கேட்டபோது:-

கொரோனா வைரஸால் ஆண்களின் இனப்பெருக்க திறன் பாதிக்கப்படலாம் என்பது தற்போது வரை ஒரு யூகம் தான். இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் ஆண்களின் இனப்பெருக்க திறன் கொரோனாவால் பாதிக்கப்படும் என்று கூறவில்லை. எனவே ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் யூகங்களின் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வர முடியாது என்று கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளல் மறைவு.

naveen santhakumar

சீனாவில் தலைதூக்கி உள்ள கொரோனா வைரஸ்; தலைநகர் பெய்ஜிங்கில் சில பகுதிகள் மூடல்… 

naveen santhakumar

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..

Shanthi