உலகம்

மீண்டும் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகையான ஏமி பாலியல் குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஏமி டோரிஸ் என்கிற மாடல் நடிகை  அதிபர் டொனால்டு டிரம்ப் மீது  பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த  1997-ம் ஆண்டு நியூயார்க்கில்(newyork) நடந்த டென்னிஸ்(tennis)  தொடரின் போது,  மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் அத்தகைய நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

அந்நிகழ்வில் மாடல் அழகி ஏமியும் கலந்து கொண்டுள்ளார். அப்போது “டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார். கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டி ஒன்றினை அளித்த ஏமி தன் விருப்பத்திற்கு மாறாக டிரம்ப் தன்னை இறுக அணைத்ததாகவும், முத்தமிட்டதாகவும் அவரது பிடியில் இருந்து தான் வெளியே வர முயன்றபோது முடியாமல் போனது” எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும்  நவம்பர்-3 -ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  23 ஆண்டுகள் கழித்து, முன்னர் மாடல் நடிகை புகார் அளித்துள்ளது அந்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.  

ALSO READ  பாராலிம்பிக் போட்டி - இந்தியாவின் வினோத் குமார் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது

ஆனால்,  இது குறித்து பேசிய டொனால்டு டிரம்ப், “தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதற்காக  திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை ஏவி விட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்”.  டிரம்ப்க்கு எதிராக இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. இதுவரை 12-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

6300 பேருக்கு போலியான கொரோனா நெகட்டிவ் சான்று- புர்கா அணிந்து தப்ப முயன்ற மருத்துவர் கைது…. 

naveen santhakumar

ஆப்கானில் தாலிபான்களின் அட்டூழியம்; வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் ..!!

naveen santhakumar

சீக்கிரம் போய் தடுப்பூசி போடுங்க இல்லாட்டி அபராதம் 15000 ரூபாய் கட்டணும்

News Editor