உலகம்

இந்திய-சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக துஷன்பே சென்றுள்ள இந்திய வெளியவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி இடையே சந்திப்பு.

Jaishankar Meets Chinese FM Wang Yi; Discusses LAC Disengagement & Global  Developments

தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது ஆண்டுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகள் துஷன்பே சென்றுள்ளனர்.

S Jaishankar Met Chinese FM Wang Yi On The Sidelines Of SCO Summit In  Dushanbe. | SCO conference: Jaishankar and China's foreign minister met in  Dushanbe, India clearly said ‣ The Nation

2001 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், அமைப்பில் சீனா, ரஷியா, இந்தியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

ALSO READ  நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில், இந்த மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்துகிறார். நேரடியாகவும், காணொலி முறையிலும் நடக்கும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள், துர்க்மெனிஸ்தான் அதிபர் மற்றும் சிறப்பு விருந்தினர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

மேலும், இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்கிறார். இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக துஷன்பே சென்றுள்ள இந்திய வெளியவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி-வை நேற்று சந்தித்து பேசினார்.

ALSO READ  கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது - முதல்வர் ஸ்டாலின்

இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருநாட்டு படைகளையும் விலக்கிக்கொள்வது, அமைதியை நிலைநாட்டுவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம், பிராந்திய அமைதி குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் நேரில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவ், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி ஆகியோரும் துஷான்பே செல்வார்கள் என தெரிகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னே ஆச்சரியம்- 1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு…!

naveen santhakumar

பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழப்பு…

Shobika

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Admin