உலகம்

ஜெஃப் பெசோஸ் பகிர்ந்த அமேசானின் தோல்வி குறித்த கட்டுரை – எலன் மஸ்கின் கிண்டல் பதில்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

1999 ஆம் ஆண்டு, அமெரிக்க பத்திரிகை ஒன்று அமேசான் பங்கின் சரிவு தொடர்பாகவும், ஜெஃப் பெசோஸை ஒரு “இடைத்தரகர்” என்று கூறி கட்டுரை வெளியிட்டிருந்தது.

Jeff Bezos Shares Old Article Predicting Amazon Would Fail: "Don't Let Them  Tell You Who You Are" - Gazeti App

இந்த கட்டுரை வெளியாகி ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆனநிலையில், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பெசோஸ் பத்திரிகை அதனை மீண்டும் தனது சமூகவலைத்தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு, அமெரிக்க பத்திரிகையான பரோன் “Amazon.bomb” என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டிருந்தது.

அதில், அமேசானின் பங்கு விலை வீழ்ச்சியடையும் மற்றும் இணைய யுகத்தில் உண்மையான வெற்றியாளர்கள் “தங்கள் சொந்த பொருட்களை நேரடியாக விற்கும் நிறுவனங்கள்” என்று கூறியிருந்தது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை “மற்றொரு இடைத்தரகர்” என்று கூறியதோடு, “அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் ஒரு புதிய வணிக முறைக்கு முன்னோடி என்பது முட்டாள்தனமானது.” என்றும் தெரிவித்திருந்தது.

ALSO READ  கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

இந்நிலையில், இந்த கட்டுரையை கட்டுரை ஒரு உத்வேகம் தந்தது என்று கூறி அதனை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமேசானின் தோல்வியை பற்றி வெளியிடப்பட்ட பல கட்டுரைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இன்று, அமேசான் உலகின் மிக வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. அதோடு முற்றிலும் மாறுபட்ட இரண்டு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆம், அந்த கட்டுரையில் கூறியது போல எதுவும் நிகழவில்லை அமேசானின் இன்றைய சந்தை மதிப்பு $ 1.6 டிரில்லியன் டாலர்கள் ஆகும். மேலும், ஜெஃப் பெசோஸ் உலகின் பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளார்.

ALSO READ  2020 புத்தாண்டு பிறந்தது: வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

இதனிடையே பெசோஸின் இந்த பதிவை விட அதற்கு கமெண்ட் செய்த எலன் மிஸ்கின் பதிவு தன அதிகம் கவனம் ஈர்த்துள்ளது. ஏனெனில், பெஸோஸின் இந்த பதிவுக்கு வெள்ளிப் பதக்க ஈமோஜியை கிண்டலாக எலன் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனர் பெசோஸை மிஞ்சி முதலிடத்துக்கு வந்தார் எலன் மஸ்க். இதனால் உலகின் நம்பர் 2பணக்காரராக ஜெஃப் பெசோஸுக்கு வெள்ளிப் பதக்கம் அனுப்புவதாக ஃபோர்ப்ஸுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியிருந்தார்.

மேலும், “வெள்ளிப் பதக்கத்துடன் ஜெஃப்-க்கு ‘2’ இலக்கத்தின் ஒரு மாபெரும் சிலையை அனுப்புகிறேன்” என்று எலன் மஸ்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துனிசியாவில் துயரம்….43 பேர் பலி…

Shobika

பென்னு விண்கல் தரையிறங்க வெற்றிகரமாக இடத்தை தேர்வுசெய்த நாசா…

Admin

இளம் பெண்ணின் கற்பை காப்பாற்றிய கொரொனா வைரஸ் !

Admin