உலகம்

பெயர் மாறும் ‛பேஸ்புக்’… புதிய பெயர் என்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமாக வில்லனாகும் பேஸ்புக்கின் பெயரை மாற்றுவதற்கு, தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Facebook planning to change its name as it becomes more than a social media  company - Technology News

உணவு இருக்கிறதோ இல்லையோ…. உடை இருக்கிறதோ இல்லையோ… பணம் இருக்கிறதோ இல்லையோ… மொபைல் போனில் ‛பேஸ்புக்’ ஆப் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் பலருக்கு. புத்தகத்தை படிக்காதவர்கள் கூட பேஸ்புக் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் எந்த செயலி முடங்கினாலும் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியாது. அதே நேரத்தில் ஒரு நொடி முடங்கினால் கூட பேஸ்புக் பயனர்கள் இந்த உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு உடலோடு உடையாக இணைந்து விட்டது பேஸ்புக்.

ALSO READ  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை 43,500 ஆயிரம் கோடிக்கு வாங்கியது பேஸ்புக் நிறுவனம்… 

சமீப காலங்களில் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு சிக்கல்களில் சிக்கி வருகிறது. அந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் அமெரிக்கா மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இதனிடையே ஃபேஸ்புக்கின் பெயரை மாற்ற அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டிருப்பதாக தி வேர்ஜ் செய்தி வெளியிட்டுள்ளது.

தி வெர்ஜ் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் அக்டோபர் 28ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஃபேஸ்புக்கின் வருடாந்திர கான்ஃபரன்ஸில் மார்க் ஸக்கர்பர்க் இது குறித்து பேசக்கூடும் எனவும், ஆனால் அதற்கு முன்னரே அடுத்த வாரத்தில் கூட ஃபேஸ்புக்கின் புதிய பெயர் வெளியாகலாம் எனவும் ஃபேஸ்புக் நிறுவன தகவல்களின் அடிப்படையில் தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.

ALSO READ  காண்போரைக் கவரும் விசித்திர நாய்… 

இதனால் விரைவில் பேஸ்புக் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெயர் மாற்றம் பேஸ்புக் நிறுவனத்தின் Instagram, WhatsApp, Oculus ஆகியவற்றையும் சார்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் புதிய பெயர் என்னவாக இருக்கும் என்ற யூகங்கள் எழுந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லைவ் டெலிகாஸ்டின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது- அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரல்…

naveen santhakumar

ஏன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா வருந்தும்: ஈரான் எச்சரிக்கை

Admin

வோட்காவை குடிங்க கொரோனாவை விரட்டுங்க: அதிபரின் அதிரடி யோசனை! 

naveen santhakumar