உலகம்

உணவு தட்டுப்பாட்டால் காடுகளில் வேட்டையாடத் துவங்கிய அமெரிக்கர்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் தொழிலை நிறுத்தி வைத்துள்ளனர். மளிகைக் கடைகளில் இறைச்சி வைக்கப்படும் இடங்கள் அனைத்தும் காலியாக காணப்படுகிறது.

கடைகள் மற்றம் நிறுவனங்கள் அடைப்பு மற்றும் வேலையிழப்பால் மக்கள் கையில் பணப்புழக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.  

இதனால் பெரும்பாலானவர்கள் உணவுக்காக காடுகளுக்குள் புகுந்து வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.  மின்னசோட்டா முதல் நியூ மெக்சிகோ வரை கடல்களில் மீன்வேட்டையில் இறங்கியுள்ளனர். 

அமெரிக்காவில் அரசு உரிமம் பெற்று பெண் மான்களை வேட்டையாட சிலருக்கு அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் தற்போது வேட்டை உரிமம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் துப்பாக்கி விற்பனையும் உயர்ந்துள்ளதாக ஆயுத விற்பனை நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. 

வேகமாக பரவி வரும்  கொரோனாவின் பாதிப்பு, அமெரிக்க மக்களை மீண்டும் வேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளது, வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ALSO READ  சுல்தான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
courtesy.

மேலும் இன்டியானா (Indiana) உள்ளிட்ட மாகாணங்களில் வான்கோழி (Turkey) வேட்டையாடுவதற்கான உரிமம் வாங்குபவர்களின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால் வேட்டையாடுபவர்கள் பெரும்பாலான நேரத்தை காடுகளில் செலவழித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016-ம் ஆண்டு முதல் 2020 வரை வேட்டையாடுபவர்களின் எண்ணிக்கை சுமார் 2,55,000 ஆக குறைந்தது. 

ALSO READ  ஆப்கனிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர்- தாலிபன்கள் அறிவிப்பு !

ஆனால் தற்போது ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவிப்பதாலும், இறைச்சிகளின் தட்டுப்பாடாலும் அமெரிக்கர்கள் மீண்டும் வேட்டையாட களமிறங்கியுள்ளனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:-

கடைகளில் இறைச்சி இல்லாததை பார்த்த மக்கள், உணவு எங்கிருந்து என வருகிறது என யோசித்து தாங்களே களத்தில் இறங்கி விட்டனர் என்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய வான்வெளியில் பறப்பதை தவிர்த்து மலேஷியா சென்ற இம்ரான் கான்

Admin

அதிகாரத்தை பிடனிடம் ஒப்படைக்க டிரம்ப் அனுமதி :

naveen santhakumar

ஒரே மாதத்தில் 2-வது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம்!

Shanthi