உலகம்

Fact Check: சவுதி அரேபியாவில் காகங்கள் படையெடுப்பு.. உலக முடிவதன் அறிகுறியா..??

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெட்டா:-

கொரோனா பரவலுக்கிடையே இந்தியாவை நோக்கி படையெடுத்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் விவசாயிகள் பெரும் பாதிப்பை கண்டு வருகிறார்கள். கண்ணில் படும் அனைத்தையும் உண்ணும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக அமைந்து உள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் காக்கைகள் படையெடுப்பு நிகழ்ந்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.  உலகத்திற்கு ஆபத்து நெருங்கி கொண்டிருக்கிறது, இது உலக அழிவின் அறிகுறி என்று எப்போதும் போல ஒரு கூட்டம் பேசு தொடங்கியுள்ளது.

ALSO READ  ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஏனெனில், ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வெட்டுக்கிளிகள் பாதிப்பு விவசாயிகள் மத்தியில் கலக்கம் ஏற்படுத்தி வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் குறித்து ஏற்கனவே, அனைத்து மத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சரி, உண்மை என்ன ? 

ALSO READ  சீனாவிற்குள் கொரோனாவை கொண்டுவந்தது அமெரிக்க ராணுவம் தான்- சீனா குற்றச்சாட்டு

சவுதியில் நிகழ்ந்த காக்கைகளின் படையெடுப்பு என்று பகிரப்பட்ட அந்த வீடியோ உண்மையில் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது அல்ல, அமெரிக்காவில் நிகழ்ந்தது. அதுவும் சமீபத்தில் இல்லை. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் ஹூஸ்டன் (Houston) நகரில் உள்ள வால்மார்ட் (WalMart) வளாகம் அருகே எடுக்கப்பட்ட வீடியோ. 

Original Video. (courtesy)

எனவே இது போன்ற வீடியோக்கள் வந்தால் அதன் உண்மை தன்மை என்ன என்பதை அறிந்து முற்படுவது நலன். எனவே சற்று சிந்தித்து  செயலாற்றுங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவாஅதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்…. கொண்டாட்டத்தில் களைகட்டும் ஐரோப்பிய நாடு…

naveen santhakumar

சீனாவில் பரவிவரும் அறிகுறிகள் அற்ற கொரோனா வைரஸ்… இரண்டாவதாக அலை ஆரம்பித்துள்ளதா ???

naveen santhakumar

காண்போரைக் கவரும் விசித்திர நாய்… 

naveen santhakumar