உலகம்

சீனாவில் பெய்த கடும் கனமழையால் வெள்ளப்பெருக்கு-பெரும் சேதம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீஜிங்:

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஹெனான் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடும் வெள்ளம்: 140 பேர் பலி | Dinamalar Tamil News

ஆண்டுக்கு சராசரியாக 60 செ.மீ மட்டுமே மழை பெய்யும் நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் 1 மணி நேரத்தில் 20 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஜென்சூ நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. மஞ்சள் ஆறு மற்றும் ஹைஹே நதிகளின் துணை நதிகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  பாகிஸ்தானில் இருந்து காபூலுக்கு முதல் விமானம் வந்தது
சீனாவில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு -25 பேர் பலி

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், ஆறுகளாக மாறிவிட்டன. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.வானிலை மைய அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 3 நாட்களில் மட்டும் 640 மி.மீ. மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கில் சிக்கிய கார்

நகரில் அதிகரித்துவரும் வெள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாயமான சிலரைத் தேடிவருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாங்காங் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை நாடும் சீனா…

naveen santhakumar

பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

News Editor

இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறும் பெண் கவிஞர்:

naveen santhakumar