உலகம்

“சாணம் முதல் சரக்கு” வரை உலகத் தலைவர்கள் பரிந்துரைக்கும் கொரோனா மருந்துகள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் கொரோனவைரஸ் கட்டுபடுத்த முடியாத ஒன்றாகவே மாறியுள்ளது. கோரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஒரு சில நாடுகள் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி வருகிறது. 

ஆனால் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு எப்படியும் அடுத்த ஆண்டு வரை ஆகும் என்று கூறப்படுகிறது.  இதனிடையே உலகத் தலைவர்கள் பலர் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நிவாரணிகளை பரிந்துரை செய்து வருகிறார்கள். அதுகுறித்து தொகுப்பு.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்:-

உலகின் வல்லரசான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸுக்கு பல்வேறு மருந்துகளை பரிந்துரை வருகிறார். மருந்துகளை பரிந்துரைக்கும் அதே நேரத்தில் சீனாவையும் அவர் சரமாரியாக வார்த்தைகளால் தாக்கி வருகிறார்.

courtesy.

இந்தியாவின் ஹைட்ராக்ஸி க்லோரோக்வின் மருந்தை பரிந்துரைத்தார். அதற்காக பெரிய போராட்டத்தையை நடத்தினார். ஆனால் ஹைட்ராக்ஸி க்லோரோக்வின் மருந்து பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்று அமெரிக்க சுகாதார துறை தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து ஹைட்ராக்ஸி க்லோரோக்வினை பரிந்துரைக்கிறார். இதெல்லாம் பரவாயில்லை இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கிருமி நாசினிகளை ஊசி மூலமாக உடலினுள் செலுத்தி கொள்ளலாமே என்று யோசனை கூறி அதிர வைத்தார். அதைத்தொடர்ந்து புற ஊதாக்கதிர்களை (UV Rays) மனிதர்கள் மீது செலுத்தி அதன் மூலமாக வைரஸை கொள்ளலாமா என்ற எல்லாம் வேற லெவல்  யோசனையை பரிந்துரைத்தார்.

அதிபர் டிரம்ப் யோசனைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமெரிக்க விஞ்ஞானிகள் சற்று அதிர்ந்துதான் போனார்கள்.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ:-

ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி (Last Dictator) என்று அமெரிக்காவால் செல்லமாக அழைக்கப்படும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ (Alexander Lukashenko) கொரோனா வைரஸ்க்கு அற்புதமான சில நிவாரணிகளை பரிந்துரைத்தார். அந்த நிவாரணிகள் வோட்கா (Vodka) அருந்துவது, டிராக்டர் ஓட்டுவது, நீராவி குளியல் (Saunas), ஐஸ் ஹாக்கி விளையாடுவது. 

தினமும் டிராக்டரை உங்கள் வயல் வெளிகள் ஓட்டுங்கள், அதைவிட சிறந்த மருந்து இல்லை எதுவும் இல்லை என்றார். மேலும் கொரோனா வைரஸ் ஒரு மனநோய் (Psychosis) என்றும் கூறினார். அறிகுறிகளற்ற (Asymptomic) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தான் வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைய காரணம் வோட்கா அருந்தியதால் தான் என்று கூறினார்.

ALSO READ  கொரோனா தொற்றால் ஐக்கிய அமீரகத்திற்கு விமான போக்குவரத்து தடை !

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்:-

நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் (ImranKhan) வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் தான் சில நாட்களில் தானாக குணமடைந்து விடும் எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.

courtesy.

அதன் பிறகு அவரே மக்கள் அனைவரும் வீடுகளில் இருங்கள் தங்கள் உடலில் ஏற்படும் அறிகுறிகளை கண்டு அதன் பிறகு மருத்துவமனை செல்லுங்கள் என்றார். 

பின்னர், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் 2 லட்சத்தை தாண்டியது. இதையடுத்து இம்ரான்கான் மக்கள் கொரோனா குறித்து சிறிதும் கவலை இல்லாமல் வெளியில் சுற்றி திரிவதால் தான் கொரானா வைரஸ் அதிகரித்தது என்றும் மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து சிறிதும் விழிப்புணர்வு இல்லை என்று அப்படியே மக்கள் மீது பழியை தூக்கிப் போட்டார்.

மற்றொரு பாகிஸ்தானின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை நாம் தூங்கினால் அதுவும் தூங்கும், நாம் விழித்து இருந்தால் அதுவும் விழித்திருக்கும், நாம் இறந்தால் அதுவும் இறக்கும் என்று கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி:- 

தான்சானியா (Tanzania) அதிபர் ஜான் பொம்பே மகுஃபுலி (John Pombe Magufuli) கொரோனா வைரஸுக்கு கூறிய நிவாரணி பிராத்தனை. ஆமாம், கொரோனவைரஸ் ஒரு நோயல்ல இது “சாத்தானின் சதி” எனவே மக்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்யுங்கள் என்று வழிபாட்டு தளங்களை மூட மறுத்தார். 

அதோடு சமூக இடைவெளியை பேணுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எவ்வளவோ அறிவுறுத்தியும் சற்றும் கவலையில்லாமல் பிரார்த்தனை ஒன்றே  கொரோனா வைரஸ் விரட்டும் என்று கூறி மக்களை ஒன்று கூடி பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக நாட்டில் உள்ள தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறந்தே வைத்திருந்தார்.

ALSO READ  இம்ரான் கான் தலைமையில் "பொம்மை ஆட்சி நடக்கிறது"……. நவாஸ் ஷெரிப் குற்றச்சாட்டு…...

மெக்சிகோ கவர்னர் லுயிஸ் மிகுவல் பர்போஸா:-

மெக்சிகோவின் பியூப்லா (Peubla) கவர்னர் லுயிஸ் மிகுவல் பர்போஸா ஹுயூர்டா (Luis Miguel Barbosa Huerta) கொரோனா குறித்து அற்புதமான ஒரு விளக்கத்தை கொடுத்தார். அதாவது ஏழையாக இருந்தால் கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை, ஏனெனில் வசதியாக இருப்பவர்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் இருக்காது, ஏழையாக இருந்தால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் இருக்கும். எனவே வசதியானவர்களுக்கு தான் கொரோனா பாதிப்பு வரும். நீங்கள் ஏழையாக இருந்தால் ஒரு பதிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றார்.

பின்னர் வான்கோழி (Turkey) சாப்பிடுவது கொரோனாவிற்கு சிறந்த மருந்து என்றும் கூறினார். 

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்:-

உலகத் தலைவர்கள் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நிவாரணிகளை கூறிவரும் நிலையில் நம் நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் மட்டும் சும்மா இருந்து விடுவார்களா என்ன.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரிஷிகேஷில் நடைபெற்ற கூட்டத்தில் தினமும் யோகா செய்வது கொரோனாவை விரட்டி விடும் என்று கூறினார். யோகா கொரானா வைரஸை விரட்டுவதோடு உடல் ரீதியாக, மனரீதியாக ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும் என்றார்.

அதோடு விடாமல் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, கல்லீரல் கோளாறு, போன்ற நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் யோகாவிற்கு உண்டு எனவே அனைவரும் தினசரி கட்டாயம் யோகா செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.

அசாம் எம்எல்ஏ சுமன் ஹரிப்பிரியா:-

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிப்பிரியா என்பவர் கொரோனா வைரஸ் குணப்படுத்தும் ஆற்றல் கோமியம் மற்றும் பசு சாணத்திற்கு இருப்பதாகக் கூறி அனைவரையும் அதிர வைத்தார். கிருமி நாசினிகளை தெளிப்பதற்கு பதிலாக கோமியத்தை உடல்மீது தெளித்துக் கொண்டால் கொரோனா நம்மை அண்டாது  என்றார். அதேபோல பசு சாணம் மற்றும் கோமியம் புற்றுநோயை குணப்படுத்தும் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகில் 8 கோடியை நெருங்கியது கொரோனா தொற்று ..!

News Editor

அமெரிக்காவில் புலிக்கும் கொரோனா வைரஸ்…..

naveen santhakumar

மீண்டும் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு:

naveen santhakumar