உலகம்

மறைந்த இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் இன்று மாலை 4 மணிக்கு அரசு மரியாதையுடன் தகனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொழும்பு:-

மறைந்த இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டைமான் அவர்களின் பூதவுடல் CLF வளாகத்திலிருந்து பிற்பகல் 2 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு நோர்வூட் மைதானத்தில் அரசு மரியாதையுடன் இன்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் அவர் மறைந்ததிலிருந்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடங்கள் குறித்து காணலாம்:-

27/05/2020 ஆன்று மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் அஞ்சலிக்காக பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

அவரது பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

28/05/2020-தேதி  அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பூதவுடல்  பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது.

ALSO READ  இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக தண்ணீரில் பிரசவம்....

பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.

தனது கைப்பட இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஆறுமுகன் தொண்டைமான் மறைவுக்கு எழுதிய இரங்கல் கடிதம் .

28-ம் தேதியே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் சௌமியா பவன் காரியாலயத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் கொழும்பிலுள்ள சௌமியபவன் காரியாலயத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

29/05/2020 அன்று ஆறுமுகன் தொண்டமானின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இறம்பொடை, வேவண்டன் இல்லத்தில் இன்று வைக்கப்பட்டது. 

ஆறுமுகன் தொண்டமான் மறைவிற்காக கதறி அழும் பொதுமக்கள்.

கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் ஹெலிகொப்படர் மூலம் கம்பளைக்கு எடுத்து வரப்பட்டது. 

பின்னர் கம்பளையில் அஞ்சலி நிகழ்வு முடிவடைந்த பின்னர் புஸல்லாவை வழியாக பூதவுடல் தாங்கிய பேழை வேவண்டன் எடுத்துச்செல்லப்படவுள்ளது.

ALSO READ  சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு புசல்லாவை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

30ம் தேதி ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள்,கட்சி உறுப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

அன்றைய தினம் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ரம்பொடையிலுள்ள வெவென்டன் வீட்டில் சமய முறைப்படி வழிபாடுகள் அனுஷ்டிக்கப்பட்டது.

நேற்று மாலை வேவண்டனிலிருந்து கொட்டகலை CLF வளாகம் கொண்டு செல்லப்பட்டு அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல்  மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நோர்வூட் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு அரசு மரியாதையுடன் ஆறுமுகன் தொண்டமானின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த முதியவர்

Admin

பூமியைப் போன்ற மற்றொரு Super Earth-ஐ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்..

naveen santhakumar

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் – அரசு அறிவிப்பு

naveen santhakumar