உலகம்

தகதகவென எரிந்த தங்க சுரங்கம்…சோகத்தில் மக்கள்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹராரே:

தென்ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது மாஷோலாந்து என்கிற மாகாணம்.அந்த மாகாணத்தின் மசோவ் என்ற நகரில் பல நாட்களாக தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த சுரங்கத்தில் சீனா உள்பட பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும்,அதுமட்டுமல்லாது ஏராளமான உள்ளூர் மக்களும் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில்,இந்த தங்க சுரங்கத்தில் கடந்த வியாழக்கிழமையன்று மாலை வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தொழிலாளர்கள் அனைவரும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

China wants to buy more copper mines to secure its supply | Financial Times

அந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக தங்க சுரங்கத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறின.இந்த விபத்தால் சுரங்கம் முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது.

ALSO READ  வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா; லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்… 

இந்த விபத்தில் சீனர்கள் 5 தொழிலாளர்கள், ஜிம்பாப்வேயை சேர்ந்த 2 தொழிலாளர்கள் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த கோர விபத்தில் தொழிலாளர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நம்ப முடியாத உணவுச் சண்டை பெற்றுத் தந்த விருது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதையடுத்து இந்த எதிர்பாராத கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவாஅதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்…. கொண்டாட்டத்தில் களைகட்டும் ஐரோப்பிய நாடு…

naveen santhakumar

கஜகஸ்தானில் 2 மாடி கட்டிடத்தில் விமானம் மோதி நொறுங்கியது : 12 பயணிகள் பலி 53 பேர் படுகாயம்

Admin

ஜோ பிடன் மனைவிக்கு கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளி பெண் நியமனம் :

naveen santhakumar