உலகம் சினிமா

கோல்டன் குளோப் விருதுகள் 2020

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி, ஜனவரி 6 தேதி நடைபெற்றது. `ஜோக்கர்’, `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’, `ஃபோர்டு vs ஃபெராரி’, `மேரேஜ் ஸ்டோரி’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் இந்த ஆண்டு விருதுகளை அள்ளிக் குவித்திருக்கின்றன. சிறந்த படத்துக்கான விருது `1917’க்கு வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த படம் – காமெடி அல்லது மியூசிக்கல் பிரிவில் குவின்டின் டாரன்டினோவின் `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்துக்கு வழங்கப்பட்டது.

வகீன் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தில் நடித்த ப்ராட் பிட் சிறந்த குணச்சித்திர நடிகர் – காமெடி,மியூசிக்கல் படத்துக்கான விருதைத் தட்டிச் சென்றார். தன் வாழ்நாள் முழுக்க சினிமாவுக்காக அர்ப்பணித்த கலைஞருக்கு வழங்கப்படும் விழாவின் மிகப்பெரிய விருதான செஸில் பி டிமில்லே விருது, இந்த முறை `தி டாவின்சி கோடு’, `ஃபாரஸ்ட் கம்ப்’ உள்ளிட்ட படங்களில் நடித்த, டாம் ஹாங்க்ஸுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைப்படம் (ட்ராமா) – `1917′

ALSO READ  முதன்முறையாக நிலத்தடியில் இருந்து ஏவுகணை பரிசோதனை நடத்திய இஸ்லாமிய புரட்சி படை... 

சிறந்த திரைப்படம் (காமெடி அல்லது மியூசிக்கல்) – `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’

சிறந்த திரைப்படம் (அனிமேஷன்) – `மிஸ்ஸிங் லிங்க்’

சிறந்த திரைப்படம் (அயல்மொழி) – `பாரசைட்’ (கொரியன்)

சிறந்த திரைக்கதை – `குவின்டின் டாரன்டினோ, `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’

சிறந்த நடிகர் – வகீன் ஃபீனிக்ஸ், `ஜோக்கர்’

சிறந்த நடிகை – ரேனே ஸெல்வெகர், `ஜூடி’

சிறந்த நடிகர் (காமெடி அல்லது மியூசிக்கல் திரைப்படம்) – டாரான் எக்கர்ட்டன், `ராக்கெட்மேன்’

சிறந்த நடிகை (காமெடி அல்லது மியூசிக்கல் திரைப்படம்) – ஆக்வாஃபீனா, `தி ஃபேர்வெல்’

சிறந்த குணச்சித்திர நடிகர் – ப்ராட் பிட், `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’

சிறந்த குணச்சித்திர நடிகை – லாரா டேர்ன், `மேரேஜ் ஸ்டோரி’

சிறந்த இசை (பாடல்) – எல்டன் ஜான் மற்றும் பெர்னி டாவ்பின், `ராக்கெட்மேன்’

சிறந்த இசை (பின்னணி) – ஹில்டூர் குவானடோட்டிரும், `ஜோக்கர்’

ALSO READ  இயக்குநர் சீனு ராமசாமிக்கு திருமணமா?????

சிறந்த தொடர் – `செர்னோபில்’

சிறந்த தொடர் (தொலைக்காட்சி) – `சக்சஷன்’

சிறந்த தொடர் (மியூசிக்கல் அல்லது காமெடி) – `ஃப்ளீபேக்’

சிறந்த நடிகர் (தொடர்) – ரஸ்ஸல் க்ரோ, `தி லவுடஸ்ட் வாய்ஸ்’

சிறந்த நடிகர் (மியூசிக்கல் அல்லது காமெடி தொடர்) – ராமி யூசஃப், `ராமி’

சிறந்த நடிகர் (தொலைக்காட்சி) – ப்ரையன் காக்ஸ், `சக்சஷன்’

சிறந்த நடிகை (தொடர்) – ஒலிவியா கோல்மேன், `தி க்ரவுன்’

சிறந்த நடிகை (காமெடி அல்லது மியூசிக்கல் தொடர்) – ஃபீப் வாலர் ப்ரிட்ஜ், `ஃப்ளீபேக்’

சிறந்த குணச்சித்திர நடிகர் (தொடர்) – ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்டு, `செர்னோபில்’

சிறந்த குணச்சித்திர நடிகை (தொடர்) – பட்ரீஷியா ஆர்க்குவிட், `தி ஆக்ட்’

மிஷேல் வில்லியம்ஸ், ஃபாஸ்ஸே/வெரான்

சிறந்த இயக்குநர் – சாம் மென்டிஸ், `1917′

தி செஸில் பி டிமில்லே வாழ்நாள் சாதனையாளர் விருது – டாம் ஹாங்ஸ்

கரோல் ப்ரூனெட் வாழ்நாள் சாதனையாளர் விருது (தொடர்) – எல்லன் டிஜெனேரஸ்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதர்வாவுடன் கைகோர்க்கும் வாணி போஜன்

Admin

“கர்ணன்” படத்தின் டீசர் குறித்து ட்வீட் செய்த தனுஷ் !

News Editor

அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்த பிரேசில் உயர் அதிகாரிக்கு கொரோனா காய்ச்சல்……

naveen santhakumar