தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
துருக்கி
உலகின் உயரமான பெண்ணாகத் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது உயரம் 7 அடி 7 அங்குலம் ஆகும். தற்போது இவரது வயது 24 ஆகும்.

இதன்மூலம் ருமேசா கெல்கி உலகின் மிக உயரமான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தலைமை அதிகாரி கிரைக் கிளிண்டே அறிவித்துள்ளார்.

2014 ம் ஆண்டே ருமேசா கெல்கி தனது 18வது வயதில் உலகின் உயரமான டீன் ஏஜ் பெண்ணாகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான மக்கள் தன்னிடம் கனிவாகவும் ஆதரவாகவும் இருக்கிறார்கள் என்று ருமேசா கெல்கி கின்னஸ் உலக சாதனை அமைப்பிடம் தெரிவித்துள்ளார். உலகின் உயரமான மனிதர், சுல்தான் கோசன், என்பவரும் துருக்கியைச் சேர்ந்தவர். இவரது உயரம் 8 .2.8 அடி ஆகும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.