உலகம்

சீனாவில் கொரோனா வைரஸ்-க்கு போட்டியாக ஹண்டா வைரஸ்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டு மொத்த உலக நாடுகளும் திணறி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது, பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுவரை 180 நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் தனது நகரங்கள் முழுவதையும் முழு அடைப்பில் வைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியுள்ளது. இந்த கலவரங்கள் அடங்குவதற்குள் சீனாவின் வடமேற்கு பகுதியில் புதிதாக ஹண்டா வைரஸ் (Hanta Virus) தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீனாவின் யுனான் (Yunnan) மாகாணத்தில் இருந்து ஷன்டாங்க் (Shandong) மாகாணத்திற்கு ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போதே இறந்தார். அவரை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தப் பேருந்தில் பயணித்த 32 பயணிகளையும் பரிசோதித்து உள்ளனர்.

ALSO READ  கோவில் திருவிழாக்களை கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும்; கிராமிய கலைஞர்கள் மனு !

ஹண்டா வைரஸ்:-

பொதுவாக எலிகளை தாக்கும் இந்த வைரஸ், எலியின் சிறுநீர், மலம், எச்சில் மூலமாக மனிதர்களுக்கும் பரவுகிறது.

இதுவும் மற்ற வகை ப்ளூ காய்ச்சல் போன்றதுதான் இதன் அறிகுறிகள் காய்ச்சல் (Korean hemorrhagic fever), தலைவலி தசைவலி வாந்தி வயிற்றுப்போக்கு ஒளிர் நீர் அடிவயிற்றுவலி

இந்த வைரஸ் அறை வெப்பநிலையில் இரண்டு மூன்று நாட்கள் கூட தாக்கு பிடித்து இருக்கும் அல்ட்ரா வயலட் கதிர்கள் மற்றும் சூரிய ஒளியில் சில மணி நேரங்களில் இறந்து விடும்

ALSO READ  ஒடிசா ரெயில் விபத்து - ஜப்பான் பிரதமர் இரங்கல்..

இந்த ஹண்டா வைரசும் காற்றில் பரவும் நீர்த்துளிகள் மூலமாகத்தான் பரவும் இந்த வைரஸ் மனித உடலில் சென்று இதயம் நுரையீரல் சிறுநீரகங்களை பாதிக்கும்

சமீப தினங்களாக சீனாவில் கொரோனா வைரஸால் எந்த நோயாளிகளும் பாதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த வைரஸ் சீனாவிற்கு மட்டுமல்ல உலகிற்க்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனது மகளை உலகிற்கு அறிமுகம் செய்த உசேன் போல்ட்… 

naveen santhakumar

இங்கிலாந்தில் திடீரென துப்பாக்கி சூடு- 6 பேர் பலி

Shobika

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. தீவிர முயற்சி

News Editor