உலகம்

இந்த விலங்கில் தான் கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு பொருட்கள் உள்ளதா..??

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் லாமா விலங்கிலிருந்து கொரோனா வைரஸ் எதிர்ப்பு பொருளைக் கண்டறியலாம் என டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 4 வயதான வின்டர் என்ற  லாமா குட்டியின் ஆன்டிபாடிகள் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதாக Ghent University மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.

Belgiun Llama Winter.

ஒட்டகக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த லாமா (Llama) மற்றும் அல்பகா (Alpaca) விலங்கு தென் அமெரிக்க நாடுகளில் பண்ணை வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விலங்கின் உடலில் கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இயற்கை எதிர் பொருள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ALSO READ  குழந்தைகளுக்கு மரபணு மாற்றம்-மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை

எஸ் புரோட்டின் எனப்படும் செல் நீட்சி மூலமாகவே கொரோனா வைரஸானது மனித செல்களுக்குள் நுழைகின்றன. ஆனால் இந்த லாமாக்களில் உள்ள எதிர் உயிரிகள் வைரஸ்களில் உள்ள இந்த எஸ் புரோட்டின் நீட்சிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இதுகுறித்த ஆராய்ச்சிகள் தற்போதுதான் நடந்து வருகின்றன என்பதனால், உடனடியாக இதனை மனிதர்களுக்குச் சோதனை செய்ய முடியாது என்றும், விலங்குகளில் இதற்கான சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே மனிதர்களுக்கு இதனை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவை கலக்கிய தமிழ் பாடல்.!!! மேடையை கலக்கிய இளைஞர்கள்..

naveen santhakumar

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ! 

Admin

20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா: ஆய்வில் கண்டுபிடிப்பு…!

naveen santhakumar