உலகம்

யார் இந்த இக்னாஸ் செம்மல்வெய்ஸ்?? இவரால் மனித குலத்திற்கு விளைந்த பயன் என்ன??..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


இன்றைய கொரோனா காலகட்டத்தில் அனைவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் பொதுவாகவே நமது வீடுகளில் வெளியே சென்று வந்தால் கை கால்களை கழுவிவிட்டு தான் வீட்டுக்குள்ளேயே வரச் சொல்வார்கள்.

கை கால்களை சுத்தமாக கழுவ வேண்டும் என்பது நமது பழக்க வழக்கத்தில் முக்கியமான ஒன்று இதேபோன்று இஸ்லாமில் தொழுகைக்கு முன்னர் கை கால்கள் மற்றும் முகத்தை சுத்தமாக கழுவி (உளு/ஒளூ) விட்டுதான் தொழுகையை மேற்கொள்வார்கள். 

ஆனால் மருத்துவத்துறையில் கைகளை கட்டாயம் கழுவவேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் ஒருவர் திகழ்ந்தார் அவர் குறித்து காணலாம்.

இக்னாஸ் செம்மல்வெய்ஸ் (Ignaz Semmelweis) 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதில வாழ்ந்த ஒரு‌ ஹங்கேரிய மருத்துவர். இப்போது ஆண்டிசெப்டிக் நடைமுறைகளின் ஆரம்ப முன்னோடியாக அறியப்படுகிறார். “தாய்மார்களின் மீட்பர்” என்று வர்ணிக்கப்படும் செம்மல்வீஸ், மகப்பேறியல் கிளினிக்குகளில் கை கிருமி நீக்கம் செய்வதன் மூலம் பியூர்பரல் காய்ச்சல் (“குழந்தை காய்ச்சல்” என்றும் அழைக்கப்படுகிறது) வெகுவாகக் குறைக்கப்படலாம் என்பதைக் கண்டுபிடித்தார்.

அவர் வேலை செய்த மகப்பேறு மருத்துவனைல் ஏற்பட்ட உயிரிழப்புகளை தீவிரமா ஆராய்ந்து மருத்துவர்கள் மூலமாக நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கண்டுபிடித்தார். மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளிகளைப் பார்த்தவுடனும் கைகழுவனும்னு பரிந்துரைத்தார். ஆனால் அவர் காலத்துல பாவம் யாருமே அவர் கூறியதை தீவிரமா எடுத்துக் கொள்ளவில்லை. பல மருத்துவர்கள் அவரை கண்டித்தனர். ஆனால் நவீன மருத்துவத்துக்கு அவருடைய பங்களிப்பு‌ அளப்பரியது.

ALSO READ  வெளிநாடுகள் தடுப்பூசி கொடுக்க முன்வந்தால் வரவேற்க வேண்டும்; விஜய் வசந்த் !

பிறப்பு:-

ஜூலை 1, 1818 இல் ஹங்கேரியின் புடாவில் (இப்போது புடாபெஸ்ட்) பிறந்தார். செம்மல்வீஸ் வியன்னா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் மற்றும் மருத்துவச்சி துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

பணி:-

1847 ஆம் ஆண்டில் இந்த நாளில், வியன்னா பொது மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ மனையில் செம்மெல்விஸ் வேலை செய்துவந்தார். அங்கு அவர் கைகளை கிருமி நீக்கம் செய்வதன் மூலம் நோய் பரவுவதை வெகுவாகக் குறைக்கும் என்பதை அவர் கண்டறிந்து நிரூபித்தார்.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவர் வியன்னா பொது மருத்துவமனையில் தனது பதவி தொடங்கியபோது, ​​”குழந்தை காய்ச்சல்” என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான மற்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத தொற்று ஐரோப்பா முழுவதும் மகப்பேறு வார்டுகளில் பரவி புதிய தாய்மார்களில் அதிக இறப்புகளுக்கு வழிவகுத்தது.

ALSO READ  கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது இடங்களில் ஓணம் கொண்டாட தடை :

செம்மல்வீஸ் இதற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்டார். ஒரு முழுமையான ஆய்வுக்கு பின்னர், முந்தைய அறுவை சிகிச்சைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளில் இருந்து தொற்றுநோயை மருத்துவர்கள் தங்கள் கைகளின் மூலம் தாய்மார்களுக்கு பரப்புவதாக கண்டறிந்தார். 

நோயாளியின் பரிசோதனைகளுக்கு இடையில் அனைத்து மருத்துவ ஊழியர்களும் கைகளை கழுவ வேண்டும் என்ற நிபந்தனையை அவர் ஏற்படுத்தினார். இதன் விளைவாக, அவரது பிரிவில் தொற்று வீதங்கள் வீழ்ச்சியடையத் தொடங்கின.

குளோரினேட்டட் சுண்ணாம்பு கரைசல்களால் கைகளைக் கழுவுவதற்கான நடைமுறையை செம்மெல்விஸ் முன்மொழிந்தார். மருத்துவர்கள் தங்கள் கைகளைக் கழுவ வேண்டும் என்ற இவரின் யோசனையில் கோபமடைந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, செம்மல்வீஸின் சகாக்கள் பலரும் ஆரம்பத்தில் அவரது கருத்துக்களை சந்தேகத்துடன் பார்த்தார்கள். பல தசாப்தங்களுக்குப் பிறகு, “நோய்க்கான கிருமிக் கோட்பாட்டை” பரவலாக ஏற்றுக்கொள்வதன் மூலம் அவரது சுகாதாரமான பரிந்துரைகள் சரிபார்க்கப்பட்டன.

இன்று, செம்மெல்விஸ் “நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டின் தந்தை” என்று பரவலாக நினைவுகூரப்படுகிறார். இது மகப்பேறியல் மட்டுமல்ல, மருத்துவத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் காலத்தில் அவருக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐநா சபைக்கு சொந்தமான காரில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட நபர்- வைரலாகும் வீடியோ… 

naveen santhakumar

பிரிட்டனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் விமான போக்குவரத்து தடை : உலக நாடுகள் அறிவிப்பு 

News Editor

நேபாள பள்ளிகளில் சீன மொழி கட்டாயம்…

naveen santhakumar