உலகம்

நியூயார்க் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்தியர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் சுப்பிரமணியனை பரிந்துரைத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்.

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை ஜனாதிபதி ஜோபைடன் பரிந்துரைத்துள்ளது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி என்ற சிறப்பை பெறுவார் அருண் சுப்பிரமணியன். மேலும் இவர் 2006 முதல் 2007-ஆம் ஆண்டு வரை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரூத்பேடர் கின்ஸ்பர்க்கின் சட்ட எழுத்தராக பணியாற்றினார். இந்நிலையில் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அருண் சுப்பிரமணியனுக்கு தேசிய ஆசிய பசிபிக் அமெரிக்க பார் அசோசியேஷன் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது


Share
ALSO READ  இவரால்தான் எங்கள் மூதாதையர்கள் அழிந்தனர்; பூர்வக்குடி அமெரிக்கர்களால் வீழ்த்தப்பட்ட கொலம்பஸ் சிலை…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜப்பான் மற்றும் தென் கொரிய நாட்டவர்கள் இந்தியா வர தடை-காரணம் என்ன..???

naveen santhakumar

மானை தன் பிடியில் இறுக்கி உணவாக்க துடித்த மலைப் பாம்பு… கடைசியில நடந்த ட்விஸ்ட்!! 

naveen santhakumar

அடடே…!!!! இந்த ஐடியா கூட நல்லாதான் இருக்கு….கல்வி கட்டணத்திற்கு பதில் தேங்காய்…..

naveen santhakumar