உலகம்

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலாஹாரிஸ் வருகைக்காக இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் – பிரதமர் மோடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன் :

இந்திய நாட்டின் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளர். பிரதமர் மோடி, அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களுடனும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய நாட்டின் வம்சாவளியைச் சேர்ந்தவரும் அமெரிக்க நாட்டின் துணை அதிபருமான கமலா ஹாரிசை வாஷிங்டனில் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஸ் இருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பின்னர் அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலாஹாரிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என கமலாஹாரிஸ் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவில் கொரானா தொற்று வேகமாக பரவிய போது, அதனை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், தடுப்பூசி போடும் பணியையும் துரிதப்படுத்தியதை கண்டு அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. கொரானா காலத்தில் இருநாடுகளும் ஒன்றாக இணைந்து தொற்றுக்கு எதிராக போராடின. கொரானா பரவலின் ஆரம்ப கட்டத்தில், உலகின் மற்ற நாடுகளுக்கு கொரானா தடுப்பூசியை வழங்கிய நாடுகளில் இந்தியாவின் பங்களிப்பு முதன்மையானது என்று துணை அதிபர் கமலாஹாரிஸ் தெரிவித்தார் .

ALSO READ  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்த ஆஸ்திரிய இளவரசி 31 வயதில் மறைவு..

அதன் பின்னர் இந்திய நாட்டின் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்த்தித்தார். கொரானா இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டபோது, எங்களுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக அமெரிக்காவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Kamala Harris meeting PM Modi: PM Modi invited US Vice President Kamala  Harris to visit India, talked about these issues | The Indian Nation

இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள வலிமையான மற்றும் துடிப்பான மக்கள் இரு நாட்டிற்கு இடையே பாலமாக விளங்குகின்றனர். அவர்களின் பங்களிப்பும் பாராட்டத்தக்கவை. இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையிலேயே கூட்டாளிகள். இரு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார் .

ALSO READ  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை…...

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஐ தேர்வு செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.

India waiting to welcome you, Modi tells Harris | english.lokmat.com

அதிபர் பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ், இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என நான் நம்புகிறேன். கமலாவின் வருகைக்காக இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நேரத்தில், இந்தியா வரும்படி நான் உங்களை அழைக்கிறேன் என்று இந்திய நாட்டின் பிரதமர் மோடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘எனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்’ -போப் ஆண்டவர் பிரான்சிஸ் :

Shobika

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் -சீனாவில் அதிசயம்

Admin