உலகம்

ஜோ பைடனுக்கு கொரோனாவா????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்: 

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறங்கியுள்ளார். 

இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக ராணுவ ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற டிரம்ப், தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு புயல் வேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

ALSO READ  ஹைட்ராக்ஸிக்லோரோகுயின் ஏற்றுமதி செய்யாவிட்டால் பதிலடி தரப்படும்- ட்ரம்ப் எச்சரிக்கை.....

இந்தநிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் அந்த நபரிடம் இருந்து ஜோ பைடனுக்கும் வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. 

இதையடுத்து ஜோ பைடனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக அவரது பிரசாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன் தெரிவித்தார். மேலும் ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவரது மருத்துவர்கள் தெரிவித்ததாக ஜென் டில்லேன் கூறினார்.

ALSO READ  அதிர்ச்சி..!!!!! கேரளாவில் தொடரும் அவலம்…..மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தல்….

முன்னதாக ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், தனது பிரசார குழுவைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 3 நாட்களுக்கு தனது பிரசார பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மானை தன் பிடியில் இறுக்கி உணவாக்க துடித்த மலைப் பாம்பு… கடைசியில நடந்த ட்விஸ்ட்!! 

naveen santhakumar

பிரித்தானிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இந்தியர்

Admin

யார் இந்த தலிபான்கள்? பாகிஸ்தான் ஆதரவுடன் உருவானது எப்படி?

naveen santhakumar