உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியரா????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா:

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் தனது முன்னோர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று முன்னாள் ஒரு பேட்டியில் கூறியிருந்தது தற்போது வைரலாகி வருகிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ்தான் இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளார். அவரது பூர்வீகம் தமிழகத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் என்பதால் அவர் வெற்றி பெற வேண்டுமென துளசேந்திரபுரத்தில் சிறப்பு பூஜைகள் கூட நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஜோ பிடனின் முன்னோர்களும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்ற செய்தி மேலும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.1972ல் செனட் உறுப்பினராக ஜோ பிடன் பதவியேற்றபோது இந்தியாவிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. பிடன் என்ற அவர்களது குடும்ப பெயரிலேயே முடிந்த அந்த கடிதத்தில் இருவரது முன்னோர்களும் ஒருவரே என்றும், முந்தைய காலத்தில் பிடன் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியா வந்தடைந்ததுமாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

சில வருடங்கள் கழித்து இது குறித்து ஒரு விழாவில் பேசிய ஜோ பிடன் ‘எனது மூதாதையர்களில் ஒருவரான ஜார்ஜ் பிடன் ஒரு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி கேப்டனாக செயல்பட்டு இந்தியா வந்தடைந்து அங்கேயே வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஜார்ஜ் பிடன் என்ற பெயரில் கிழக்கிந்திய கம்பெனியில் யாரும் இருந்தார்களா???? என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லையாம்.

ALSO READ  ஜோ பைடனுக்கு கொரோனாவா????

அதே சமயம் பிடன் என்ற பெயரில் முடியும் ஒருவர் முந்தைய மெட்ராஸுக்கு வந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. க்ரிஸ்டோபர் பிடன் என்னும் அவர் சென்னையில் வாழ்ந்து இறந்ததற்கான நினைவு சின்னமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,தற்போது இது வைரலாகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சார்லி சாப்ளின் எனும் சரித்திர சகாப்தம்

Admin

சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்…

naveen santhakumar

நீங்கள் ஒன்னும் கவலைப்படாதீங்க டிரம்ப்….உங்களுக்கு நாங்க வேலை கொடுக்குறோம்….

naveen santhakumar