உலகம்

ஆக்சிஜன் இன்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல் அவிவ்,

பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பல செல் உயிரிகளிலும் காற்றுசுவாசம் நடைபெறுவதாக நம்பப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் ஒட்டுண்ணியை கண்டுபிடித்துள்ளனர்.

ALSO READ  நைஜீரியாவில் ஆயுத தாக்குதல் - 22 பேர் பலி
Courtesy TOMO News

சால்மோன் மீனின் தசைசெல்களில் உயிர்வாழும் ஜெல்லிமீன் போன்ற அந்த ஒட்டுண்ணிக்கு ஹெனிகுயா சால்மினிகோலா (Henneguya salminicola) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அதில் செல்களின் ஆற்றல் நிலையமான மைட்டோகாண்ட்ரியா இல்லை என TAU’s school of Zoology ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மைட்டோகாண்ட்ரியா பலசெல் உயிரிகளில் ஆக்சிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் தலையாய பணியை செய்வதால், காற்றுசுவாசத்திற்கு முக்கியமானதாகும்.

ALSO READ  கொரோனா தொற்று இல்லையென்றாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்-துபாய் அரசு அதிரடி

இது பற்றி கூறிய TAU’s Prof. Dorothee Huchon:-
இந்த ஒட்டுண்ணி ஆரம்பத்தில் மைட்டோகாண்ட்ரியாவை பெற்றிருந்துள்ளது. பின்நாட்களில் அதை இழந்துவிட்டதாக தெரிகிறது என்றார்.

இந்நிலையில் அவ்வமைப்பில்லாத உயிரியை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மலைப்பாம்பிடம் பேட்டி எடுத்த பெண் நிருபர்

Admin

வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்படுகிறது:

naveen santhakumar

பிரசவத்தில் உடைந்த குழந்தையின் கால் …ரஷ்யாவில் நடந்த கொடூரம்

Admin