உலகம்

இவ்வளவு பெரிய பீட்ஸாவை பார்த்து இருக்கீங்களா ???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரேலியா ஏற்பட்ட காட்டுத்தீ உலகையே திரும்பி பார்க்கவைத்து. பல மாதங்கள் நீடித்த இந்த காட்டுத்தீயால் பல காட்டு விலங்குகளும் மக்களும் பாதிக்கப்பட்டனர். பல்லாயிரகணக்கான ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசமானது. மேலும் 3000 வீடுகள் எரிந்து சேதமாகியுள்ளது.28 நபர்கள் இறந்துள்ளனர்.

எனவே காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதத்திற்காகவும் காட்டுதீயை எதிர்த்து போராடியவர்களுக்காக பல வகையில் நிதி திரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், ப்ரையன் லாரா உள்ளிட்ட வீரர்கள் காட்டுத்தீ பாதிப்புக்கு நிதி திரட்ட சிறப்பு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார்கள்.

ALSO READ  பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட சிலுவை… 

இந்நிலையில் சிட்னியில் உள்ள பிரபல இத்தாலிய உணவகம் ஒன்றில் ராட்சச பீட்ஸாவை தயாரித்து அதன் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது .

இந்த பீசா 338 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்டுள்ளது. மேலும் இந்த பீசா 4,000 துண்டுகளாக வெட்டப்பட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 3000 நபர்களிடம் விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது.

ALSO READ  விவசாயிகளுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் கருத்து..!

இந்த பீசாவை பார்க்க வந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் கருப்பினத்தவர் நடுரோட்டில் கழுத்தில் காலை வைத்து தாக்கி கொன்ற போலீசார்- கலவர பூமியான அமெரிக்கா… 

naveen santhakumar

தென் பசிபிக் பெருங்கடலின் வானாட்டு தீவில் கடும் நிலநடுக்கம் :

Shobika

சீனாவின் கொடூரங்களை அம்பலப்படுத்தியதற்காக இந்திய வம்சாவளி பெண்ணுக்கு புலிட்சர் விருது..!

naveen santhakumar