உலகம்

ஜோ பைடன் அரசவையில் திருநங்கை ஒருவருக்கு முக்கிய பதவி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார்.

அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயலாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பில் பதவி வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார் டாக்டர் லெவின்.

ALSO READ  தடுப்பூசி போடலனா மாதம் ரூ.15 ஆயிரம் அபராதம்..!

நிலையான தலைமை மற்றும் இன்றியமையாத நிபுணத்துவத்தை லெவின் கொண்டு வருவார் என்றும், இதுபோன்ற பதவிகளுக்கு வருவதற்கு அவர்களின் ஜிப் குறியீடு, இனம், மதம், பாலின அடையாளம், உடற்திறன் குறைபாடு ஆகியவை முக்கியமல்ல…..என்றும் பைடன் தனது அறிக்கையில் கூறி உள்ளார். “அமெரிக்க நிர்வாகத்தின் சுகாதார முயற்சிகளை வழிநடத்த உதவும் தகுதி வாய்ந்த தேர்வு லெவின்” என்றும் பைடன் கூறியுள்ளார்.லெவின் தற்போது பென்சில்வேனியாவின் சுகாதார செயலாளராகவும், மாநில மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மனநல பேராசிரியராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூன்றாவது அலை துவக்கம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை …!

naveen santhakumar

நியூயார்க் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்தியர்!

Shanthi

ரயில் நிலையத்தில் சும்மா நின்ற இளைஞரை சம்பவம் செய்த பெண்

Admin