உலகம்

மல்யுத்த வீரர் ஸ்டோன் கோல்டு இன் முகத்தோடு ரன்வீர் சிங்கின் முகத்தை மார்பிங் செய்த மல்யுத்த வீரர் ஜான் சீனா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

WWE  மல்யுத்தப் போட்டிகள் உலகமுழுதும் மிகவும் பிரபலமானவை. WWE இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. WWE முக்கிய விசித்திரமான ஜான் சீனா-க்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

பொதுவாக ஜான் சீனா தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவிடுவார். ஆனால் புகைப்படத்தை பதிவு செய்வதோடு சரி அதில் கேப்ஷன்  எதுவும் இட மாட்டார். ஆனால் நிச்சயமாக அவர் பதிவிடும் புகைப்படங்கள் செய்தியாக மாறும்.

ALSO READ  WWE- ல் இருந்து விடைபெற்றார் 90’ஸ் கிட்ஸ்களின் திகில் நாயகன் 'தி அண்டர்டேக்கர்'!..

இந்நிலையில் தற்பொழுது மற்றொரு பிரபல மல்யுத்த வீரரான ஸ்டோன் கோல்டன் ஸ்டீவ் ஆஸ்டின் புகைப்படத்தோடு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் புகைப்படத்தை இணைத்து மார்பிங் செய்து பதிவிட்டுள்ளார். 

இதில் ரன்வீர்சிங் பத்மாவத் படத்தில் ஏற்றிருந்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தை ஸ்டோன் கோல்டு முகத்தோடு பொருத்தி பதிவிட்டுள்ளார்.

ALSO READ  இர்பான் கான் மற்றும் ரிஷி கபூர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த John Cena...

தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது இதற்கு முன்னதாக பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் புகைப்படத்தை இதுபோல ஸ்டோன் ஸ்கூல் முகத்தோடு பொருத்தி பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன்னர் ரன்வீர் சிங் கலர் கலரான சட்டை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஜான் சீனா.

இதுபோன்று ஜான்சீனா ஷாருக்கான், இர்பான்கான்,ரிஷி கபூர், தலேர் மெஹந்தி, காமெடி நடிகர் கபில் சர்மா உள்ளிட்ட பலரது புகைப்படங்களையும் முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் – மலாலா அதிர்ச்சி

News Editor

முகக்கவசம் அணிய மறுத்த பிரேசில் அதிபருக்கு கொரோனா… 

naveen santhakumar

நீங்கள் ஒன்னும் கவலைப்படாதீங்க டிரம்ப்….உங்களுக்கு நாங்க வேலை கொடுக்குறோம்….

naveen santhakumar