உலகம்

சிக்கலில் அமெரிக்கா – 1990 ம் ஆண்டுக்கு பின்பு அமெரிக்காவில் கடும் விலை உயர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர் வைப் பார்க்கையில், 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட விலை உயர்வு அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

Will Stimulus Spark Inflation? Two Theories You Should Know

தனிநபர் நுகர்வு செலவின விலை அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு விலைவாசி உயர்வைக் கணக்கிடுவதும் வழக்கமாக உள் ளது. மற்ற அட்டவணைகளைக் காட்டிலும் இதில் கணக்கிடுவதையே அமெரிக்காவின் மத்திய வங்கி விரும்புகிறது. அதோடு, இந்த அட்டவணையைத் தொடர்ந்து வங்கி கண்காணித்தும் வருகிறது.

அக்டோபர் மாதத்தில் கணக்கிடுகையில், கடந்த ஆண்டு இதே வேளையில் இருந்ததை விட 5 சதவிகிதம் அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக இந்த அட்டவணை காட்டியது.

இது போன்ற உயர்வு அண்மைக்காலத்தில் நிகழ்ந்ததில்லை என்றும், 1990 ஆம் ஆண்டில்தான் கடைசியாக இத்தகைய உயர்வு இருந்தது என்றும் கூறியுள்ளனர். இது மேலும் உயரவே வாய்ப்புகள் உள்ளன.

ALSO READ  இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டி நியமனம் :

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த பணவீக்கம் குறைய கூடுதல் காலம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கியின் கணிப்பையும் இது மீறவிருக்கிறது. பொருட்கள் மீதான கிராக்கியும் குறையாமல் இருப்பதால் விலை அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ALSO READ  தங்கையை காக்க வீரசாகசம்… முகத்தில் 90 தையல்… 6 வயது சிறுவனின் பாசம்… 

தனது வட்டி விகிதங் களை அப்படியே வைத்திருக்கவே அமெரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அடுத்த உயர்வு டிசம்பர் 2022இல்தான் மேற்கொள்ள வேண்டும் என்பது அந்த வங்கியின் திட்டமாகும்.

ஆனால் தற்போதுள்ள நிலவரப்படி, செப்டம்பர் 2022 இல் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய வங்கி ஆளாகும் என்று அமெரிக்க வாழ் பொரு ளாதார வல்லுநர் துவான் குயென் எச்சரிக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

Admin

இவ்வளவு பெரிய பீட்ஸாவை பார்த்து இருக்கீங்களா ???

naveen santhakumar

விமானத்தில் செல்வதுபோல் விண்வெளி செல்வதற்கும் வாகனம் தயார் செய்யப்படும் – மயில்சாமி அண்ணாதுரை

News Editor