உலகம்

முக்கிய ஆவணங்களில் கிம் கையெழுத்திட வில்லை… வடகொரியாவில் அதிகாரம் செலுத்தும் சகோதரி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக அளவில் கொரோனா வைரஸ்க்கு இணையாக பரபரப்பாக பேசப்படும் மற்றொரு விஷயம் என்னவென்றால் கிம் ஜாங் உன் தொடர்பானது தான். கிம் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி தான் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல வாரங்களாக கிம் பல முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கிம் குறித்து பல நாடுகள் பல்வேறு விதமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.  இதனிடையே இறந்துவிட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. 

ALSO READ  தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ஊதியம் கிடையாது- பாக்.அதிரடி

இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகிறது. கிம் நலமுடன் இருப்பதாக தென் கொரியா செய்தி ஒன்று வெளியிட்டது. ஆனால் இதுவரையில் வடகொரியா கிம் தொடர்பான அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் வெளியிடவில்லை.

பல வாரங்களாக நாட்டின் முக்கிய ஆவணங்களில் கிம் ஜோங் உன் கையெழுத்திடவில்லை என்று ஜப்பானை சேர்ந்த Gendai Business என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மத்தியில் இருந்து கிம்மின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் இதுவரை கையெழுத்தாகி திரும்ப அனுப்பப்படவில்லை என்று ஜெண்டாய் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸ் நியூ வெர்ஷனின் 7 அறிகுறிகள்:

இதனிடையே கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் வட கொரியாவிலும், பொலிட்பீரோவிலும் தனது செல்வாக்கு செலுத்தி வருவதாக  தென்கொரியாவின் National Assembly Research Services கூறியுள்ளது.

முன்னதாக பிப்ரவரி மத்தியில் ஜேர்மனியை சேர்ந்த மருத்துவர் குழு ஒன்று கிம்மின் உடல்நிலையை கவனிப்பதற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வட கொரியா பிரான்ஸிடமும் மருத்துவர் குழு ஒன்றை அனுப்ப கோரி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிங்கத்திடம் சிக்கிய சிறுவன்: சாதுரியமாக மீட்ட தந்தை

Admin

இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது நாட்டிலுள்ள மலைச்சிகரத்தில் ஒளிரச் செய்த ஸ்விட்சர்லாந்து…காரணம் என்ன தெரியுமா???

naveen santhakumar

இந்திய விமானங்களுக்கான தடையை நீடித்தது கனடா அரசு :

Shobika