உலகம்

வந்தவர் கிம் ஜோங் உன் இல்லையா !!குழப்பத்தில் உலக நாடுகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மர்மங்களின் மர்மம் விசித்திரங்களின் விசித்திரம் என்றால் அது தற்காலத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்-க்கு மட்டுமே பொருந்தும்.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் பல நாட்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். இதனால் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திடீரென்று கடந்த மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் நாட்டின் தலைநகர் பியோயாங் அருகே உரத்தொழிற்சாலை ஒன்றை திறந்து வைத்தார்.

இந்நிலையில், தற்போது வந்தது கிம் தானா? என்று சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. 

இந்த சந்தேகத்தை கிளப்பியவர்களுல் ஒருவர் முன்னாள் பிரிட்டன் பாராளுமன்ற எம்.பி லூயிஸ் மென்ச் (Louise Mensch).

இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சந்தேகம் ஒன்று எழுப்பியுள்ளார்:-

அதாவது இப்போது வந்த கிம்மின் பற்களும், இதற்கு முன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் பற்களும் வேறு மாதிரி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  கொரோனா வைரஸ் பரவல்.... தனது வலிமையைகாட்டும் வடகொரிய அதிபர் கிம்....

வடகொரியா ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படத்தில் பற்கள் நன்றாக இருக்கிறது.அதே சமயம் லூயிஸ் மென்ச் குறிப்பிட்டிருக்கும் தற்போதைய கிம்மின் புகைப்படத்தையும், வடகொரியா ஊடகங்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புகைப்படங்களும் (பற்கள் நன்றாக இருக்கிறது) வேறு மாதிரி உள்ளன.

அதுமட்டுமின்றி கிம் முற்றிலும் வித்தியாசமாக உள்ளார். கண்ணம் எல்லாம் முன்பு இருந்ததை விட இப்போது இரண்டு மடங்கு சதைபோட்டு உள்ளது. இதற்கு அவருடைய முந்தைய உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 

தற்போது வந்த கிம்மின் காதுக்கும், அதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருக்கும் கிம்மின் காதுக்கும் வித்தியாசமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  பாதிக்கும் குறைவான அமெரிக்கர்களுக்கே ஹாலோகாஸ்ட் யூத படுகொலை குறித்து தெரிந்துள்ளது- ஆய்வில் தகவல்

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடுமையாக செயல்படும் ஜெனிபர் ஜெங் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்:-

கடந்த 1-ஆம் தேதி வந்த கிம்மிடம் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நான்கு விஷயங்கள், பல், காது, முடி மற்றும் அவருடைய சகோதரி என்று குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், முன்பை விட கிம் இப்போது மிகவும் உடல் அளவில் ஏதோ பிரச்சினை சந்தித்து வருகிறார். அதற்கு அவருடைய உடல் மாற்றங்களே உதாரணம் என்பது மறுக்க முடியாத உண்மை  என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏவுகணை சோதனை நடத்தப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கிம்முடன் இருக்கும் நபர் அவரைப் போன்றே தோற்றமளிக்கும் உடை அணிந்துள்ளார். முடிவெட்டும் கூட அவருடன் ஒத்துப் போகிறது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன்னைப் போன்று தோற்றமளிக்கும் கொண்ட நபரை பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் இப்போது வலுக்க ஆரம்பித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தும் நாடாக வடகொரியா உள்ளது. ஏனெனில் பல்வேறு நாடுகள் அணு ஆயுத சோதனைகள் செய்ய வேண்டாம் என்று கூறிய போதும், தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக, மீண்டும், மீண்டும் சோதனை செய்தது.

இதனால் கண்ணுக்கு தெரியாத எதிரிகள், துரோகிகள் மற்றும் படுகொலையில் இருந்து தப்பிப்பதற்கு கிம் தன்னைப் போன்று தோற்றமளிக்கும் கொண்ட நபரை பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது ஒன்றும் புதிதல்ல  இதற்கு முன்னர் பலர் இதுபோன்ற உருவத் தோற்றம் அளிக்கும் நபர்களை பயன்படுத்தியுள்ளனர். ஹிட்லர் மற்றும் சதாம் உசேன் உள்ளிட்ட சர்வாதிகாரிகள் பல தன்னைப் போன்று தோற்றமளிக்கும் நபர்களை பயன்படுத்தியதாக கோட்பாடுகள் நம்புகின்றன. அதே பாணியை கிம் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

அதேபோன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மீது காலம் காலமாக நிலவும் ஒரு குற்றச்சாட்டு அவர் தன்னைப் போன்று தோற்றமளிக்கும் உருவ இரட்டையர்களை பயன்படுத்தினார் என்பது தான்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே ட்வீட்டில்  பிட்காயின்களின் விலை அதிகரித்த எலான் மஸ்க் !

News Editor

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிய ஆப்பிரிக்க மன்னர்

Admin

வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்… 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடும் மக்கள்…ஒப்புக்கொண்ட அதிபர் கிங்ஜாங்உன்…!!!

Shobika