உலகம்

எங்கள் தாய் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் கமலா ஹாரிஸ் தங்கையின் உணர்வுபூர்வ வீடியோ… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்மணி கமலா ஹாரிஸ் குறித்தும் அவரது தாய் குறித்தும் சகோதரி மாயா ஹாரிஸ் உணர்வுபூர்வமான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த சியாமளா கோபாலனுக்கும், ஜமைக்காவை சேர்ந்த ஹாரிஸ் என்ற கல்லூரி பேராசிரியருக்கும் மகளாக பிறந்து, அமெரிக்காவின் முதலாவது ஆசிய-அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் என்ற பெருமையை எட்டியுள்ள கமலா ஹாரிஸ் குறித்து உலக மக்கள் ஆர்வத்துடன் இணையத்தில் அலசி வருகின்றனர்.

இந்நிலையில், கமலா ஹாரிஸ் யார் என்று தெரிய வேண்டுமானால் நீங்கள் எங்கள் தாயார் யார் என்பதை அறிந்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் சாத்தியமாக்கிய பெண்மணி தங்களது தாயார் என்றும் இதில் குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ்:-

ALSO READ  ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு !
ஜோ பிடனுடன் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ் தாய்வழியில் இந்திய வம்சாவளிப் பெண் ஆவார். இவரது தாய் சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர்.

1964 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் ஓக்லாந்து நகரில் கமலா ஹாரிஸ்  பிறந்தார். இவர் ஹோவார்ட் பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஹாஸ்டிங்ஸ் சட்டக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றுள்ளார். இவர் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கி உள்ளார்.

இவர் கடந்த 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா அட்டர்னி ஜனரலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த செனட்டர் தேர்தலில் வெற்றி பெற்று கலிஃபோர்னியாவின் மூன்றாம் பெண் செனட்டர் என்னும் பெருமையைப் பெற்றார்.  

உறவினர்கள்.

கமலா ஹாரிஸின் தாய் சியாமளா கோபாலன் அமெரிக்காவில் ஒரு பிரபல புற்று நோய் நிபுணர் ஆவார். இவர் சென்னையில் கடந்த 1938 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார்.  சியாமளாவின் தாய் ராஜம் மற்றும் தந்தை பி வி கோபாலன் ஆவார்கள். பி வி கோபாலன் சுதந்திர போராட்ட வீரராவார். மேலும் இந்திய அரசின் துணை செயலராகப் பதவி வகித்தவர் ஆவார். தாய் ராஜம் பெண்ணிய உரிமைகளுக்காகப் போராடியவர் ஆவார்.

ALSO READ  அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு டிரம்ப் வாழ்த்து !

சியாமளா கோபாலன் தனது 19 ஆம் வயதில் டெல்லி லேடி இர்வின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பிறகு 1960 ஆம் வருடம் அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் 1961 ஆம் வருடம் பிரிட்டிஷ் ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றியவராவார். கமலாஹாரிசின் சகோதரி, மாயா ஹாரீஸ், கடந்த 2016 ல் அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்தார்.

கமலா ஹாரிஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு டக்ளஸ் எமாஃப் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

ஒரு வேளை கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனால் அவர் முதல் கருப்பு துணை அதிபர் மற்றும் முதல் ஆசியன் அமெரிக்கன் துணை அதிபர் எனவும் புகழ் பெறுவார்.   

ஜனநாயக கட்சி கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்ததன் மூலமாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க ஓட்டுகளை கவர திட்டமிட்டு உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாவது உலக தலைவர்

News Editor

இந்திய வான்வெளியில் பறப்பதை தவிர்த்து மலேஷியா சென்ற இம்ரான் கான்

Admin

150 இந்தியர்களை தாலிபான்கள் விடுவிப்பு

News Editor