உலகம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளர் லாரி கிங் மரணம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளர் லாரி கிங்(87) உயிரிழந்தார். 1950 மற்றும் 60-களில் வானொலி தொகுப்பாளராக இருந்த லாரி கிங், பின்னர் தொலைக்காட்சி நெறியாளராக மாறினார். உலக அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களுடனான நேர்காணல் மூலம் லாரி கிங் உலக அளவில் புகழ் பெற்றார்.

தனது 60 ஆண்டுகால தொலைக்காட்சித் துறை வாழ்க்கையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான நேர்காணல்களை லாரி கிங் நடத்தியுள்ளார்.ஜெரால்ட் போர்டு முதல் ஒபாமா வரை பதவியில் இருந்த பல அமெரிக்க ஜனாதிபதிகளுடனும், உலக தலைவர்கள் பலருடனும் இவர் நேர்காணல்களை நடத்தியுள்ளார்.எம்மி, பிபாடி, உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த லாரி கிங், கடந்த 2010-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ALSO READ  அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்....மேலும் சுனாமி எச்சரிக்கை...

லாரி கிங்குக்கு மொத்தம் 7 மனைவிகள் அவருக்கு 8 முறை திருமணம் நடந்துள்ளது. அதாவது அவர் தனது மனைவிகளில் ஒருவரை 2 முறை திருமணம் செய்து கொண்டார்.கலிபோர்னியா மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த லாரி கிங்குக்கு இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.இருப்பினும் கொரோனா பாதிப்பால் அவர் இறந்தாரா???? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனா எடுத்த அதிரடி முடிவு… காரணம் என்ன..???

naveen santhakumar

லெபனானை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பயங்கர தீ விபத்து… 

naveen santhakumar

இம்ரான் கான் தலைமையில் “பொம்மை ஆட்சி நடக்கிறது”……. நவாஸ் ஷெரிப் குற்றச்சாட்டு……

naveen santhakumar