உலகம்

கொரோனாவால் காட்டு விலங்குகளுக்கு கிடைத்த சுதந்திரம்…. வைரலாகும் புகைப்படங்கள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்னாப்பிரிக்கா:-

உலகெங்கும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தால் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளர்.  இந்த ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு தான் திண்டாட்டமே தவிர விலங்குகளுக்கு கொண்டாட்டமாக தான் உள்ளது.

Courtesy.

அவ்வகையில், தென்னாப்பிரிக்காவில் சாலைகளில் ஹாயாக சிங்கங்கள் ஓய்வெடுத்து வரும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை ரீச்சர்ட் சவுரி (Richard Sowry) என்பவர் எடுத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் தேசிய பூங்காவில் (Kruger National Park) தான் இந்த காட்சிகள் நடைபெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் மக்கள் யாரும் வெளியே வருவதில்லை. இந்நிலையில் க்ரூகர் தேசிய பூங்கா அருகே உள்ள ஒரு கோல்ஃப் க்ளப் ஒன்றின் புல்வெளியில் சிங்கங்களும், கழுதை புலிகளும், காட்டு நாய்களும் அங்குள்ள புல்வெளியில் படுத்து உறங்குவது அந்த பகுதியில் சுற்றித் திரிவதை க்ரூகர் தேசியப்பூங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

ALSO READ  இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்; இந்திய பெண்மணி உயிரிழப்பு !

இதுகுறித்து கூறிய க்ரூகர் தேசியப் பூங்காவின் செய்தித்தொடர்பாளர் ஐசக் பாலா (Issac Phaala):-

ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்ட உள்ள காரணத்தால் மக்கள் யாரும் வெளியே வரவில்லை. இதனால் காட்டு விலங்குகள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த சுதந்திரத்தை கொண்டாடி வருகின்றன. அவைகள் சாலைகளில் நடமாடியும், புல் தரையில் படுத்து உறங்கியும் தங்களது அடைபட்ட வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து கொண்டாடி வருகின்றன என்றார்.

ALSO READ  யார் இந்த சாமுவெல் மோர்ஸ்..???

ஸ்குகுஸா (Skukuza) கோல்ப் கிளப்-ன் கேப்டனான  ஜீன் ரோசாவ் (Jean Rossouw) என்பவர் தான் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தவர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா மீதான தடையை நீக்கியது ஜெர்மனி :

Shobika

தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் வழங்குகிறது சீனா- மியான்மர் குற்றச்சாட்டு… 

naveen santhakumar

பலூன் மூலம் வைரஸ் பரப்புகிறது வடகொரியா?? ஜப்பான் வானில் பறந்த விசித்திர பொருள்…

naveen santhakumar