உலகம்

மிஸ் பண்ணிடாதீங்க – இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வான, மிக நீண்ட சந்திர கிரகணம் நாளை (நவ.19) நிகழவுள்ளதாக வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

November lunar eclipse 2021: how to photograph the full flower moon on your  phone or camera with the right settings | Photography | The Guardian

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (நவ.19) நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது 3 மணி நேரம் 28 நிமிடம் மற்றும் 23 வினாடிகள் நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 11.32 முதல் மாலை 5.34 மணி வரை (6.02 மணி நேரம்) கிரகணம் நிகழும்.

சூரியன், நிலவு, பூமி மூன்றும்ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல்சந்திரனை மறைத்தால் அதுசந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும்.

ALSO READ  கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களால் ஆபத்து… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் கூறப்படுகிறது.

What time is the lunar eclipse? When November 2021 full moon peaks and if  you can see partial eclipse from UK

இதற்குமுன் நீண்ட சந்திர கிரகணம் 1440-ம் ஆண்டு பிப்.18-ம்தேதி ஏற்பட்டது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுதான் நெடிய கிரகணம் தோன்ற உள்ளது.இத்தகைய நிகழ்வு மீண்டும் 2669-ம் ஆண்டு பிப்.8-ம் தேதி தென்படும்.

ALSO READ  இஸ்ரேல் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை…

இதன்போது நிலவின் மேற்பரப்பு 97% சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். குறிப்பாக வட அமெரிக்கா பிராந்தியத்துக்கு இது தென்படும் என்றும், 2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்ற நீண்ட சந்திர கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா கணித்துள்ளது.

When Is the Partial Lunar Eclipse November 2021 and Can I See It From My  Location?

இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சந்திர உதயத்துக்கு பின்னர் மிகவும் குறுகிய நேரம் கிரகணம் தென்படும். தமிழகம் உட்பட பிற பகுதிகளில் தெரியாது என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இதுவரை கொரோனா வைரஸ் பிடியில் சிக்காத உலகின் மிகச்சிறிய நாடுகள்….

naveen santhakumar

இத்தனை அறிகுறிகளுடன் கொரோனாவா…????

Shobika

வெளியுறவு அமைச்சக அலுவகலத்தில் பணியாற்றி வரும் பூனை ஓய்வு பெற்றதாக அறிவிப்பு.. 

naveen santhakumar