உலகம்

அண்டவெளியில் வெப்ப பொருளை உமிழும் கருந்துளையை கண்டறிந்த விஞ்ஞானிகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஃப்ளோரிடா:- 

கருந்துளை ஒன்று அதிக வெப்பமான பொருளொன்றை விண்வெளியில் உமிழ்வதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இந்தக் கருந்துளையிலிருந்து வெப்ப பொருளானது கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் விண்வெளியில் உமிழப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே அப்சர்வேட்டரி படம் பிடித்துள்ளது.

இந்தக் கருந்துளை மற்றும் அதன் துணை நட்சத்திரம் அடங்கிய அமைப்பு MAXI J1820+070 எனப்படுகிறது. இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 10000 ஒளியாண்டுகள் தொலைவில் நமது அண்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கருந்துளை MAXI J1820+070 நமது சூரியனை விட எட்டு மடங்கு அதிக நிறையை பெற்றுள்ளது. நட்சத்திர நிறை கொண்ட கருந்துளை என்று அழைக்கப்படுகிற இந்த கருந்துளை பெருத்த நட்சத்திரம் ஒன்று உருக்குலைவதன் காரணமாக அல்லது அழிவதன் காரணமாக உருவாகியுள்ளது.

courtesy.

அதேசமயம் அந்த கருந்துளைக்கு துணையாக உள்ள நட்சத்திரமானது நமது சூரியனின் நிறையில் பாதியை கொண்டுள்ளது. இந்தக் கருந்துளையின் வலிமையான ஈர்ப்பு விசை காரணமாக துணை நட்சத்திரத்திலிருந்து வெளியே தள்ளப்படும் வெப்ப பொருளானது கருத்துரையை சுற்றியுள்ள எக்ஸ் கதிர்களை  விழக்கூடிய வளையத்திற்குள் தள்ளுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு முறையும் கருந்துளையின் ஈர்ப்பு விசை காரணமாக கவரப்படும் பொருட்கள் அனைத்தும் அதனை சுற்றி உள்ள வளையத்தில் உட்கிரகிக்கப்படுகிறது. 

ALSO READ  சீனாவில் பள்ளி மாணவர்களின் நலன் காக்க புதிய கல்விச் சட்டம் தேசிய மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றியது
Candra X-Ray Observatory.

இதுவரை இந்த கருந்துளைகளால் அண்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வெப்ப பொருட்களின் அளவு 400 மில்லியன் பில்லியன் பவுண்டுகள் என்று வானியல் ஆய்வாளர்கள் கணக்கிடப்பட்டுள்ளது. 

இவை அனைத்தும் நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே அப்சர்வேட்டரி மூலமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது மேலும் ஹவாயில் உள்ள பேன் ஸ்டார்ஸ் ஆப்டிகல் டெலஸ்கோப் (PanSTARRS optical telescope) மூலமாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  NASA-வின் அதிர்ச்சி அறிக்கை.....இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்.....

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இங்கிலாந்து இளவரசர் சார்லஸை சந்தித்தாரா கனிக்கா கபூர்…

naveen santhakumar

கலவர பூமியான சிறை…. அதிபரின் அதிரடி முடிவு….

naveen santhakumar

தெற்கு பிரேசிலில் நடந்த கொடூரம்…..கருப்பினத்தவர் அடித்து கொலை……

naveen santhakumar