உலகம்

மினி லிபெர்ட்டி: அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை பரிசளித்த பிரான்ஸ்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாரீஸ்:-

அமெரிக்காவிற்கு ஏற்கனவே அளித்த சுதந்திரா தேவி சிலையை போன்ற சிறிய சிலையை பிரான்ஸ் மீண்டு அளித்துள்ளது.

Mini Lady Liberty statue heads to US for July 4 celebrations - WBOC TV

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் பரப்பில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. இந்த சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூறாண்டுகள் ஆனதையொட்டி பிரான்ஸ் நாடு சுதந்திர தேவி சிலையை வடிவமைத்து அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியது. கப்பல் மூலம் அனுப்பப்பட்ட சிலை 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி அமெரிக்க மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினம் வருகிற ஜூலை 4-ந்தேதி நடைபெறுவதையொட்டி அமெரிக்காவுக்கு பிரான்ஸ் மற்றொரு சுதந்திர தேவி சிலையை செய்து பரிசாக அனுப்பி உள்ளது. பிரமாண்ட சுதந்திர தேவி சிலையை போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மினி சுதந்திர தேவி சிலை 3 மீட்டர் (கிட்டத்தட்ட 10 அடி) உயரம் கொண்டது.

ALSO READ  வீடுகளுக்கே சென்று நோபல் பரிசு வழங்கப்பட்டது :
Mini Lady Liberty statue heads to US for July 4 celebrations | National |  herald-review.com

புதிய சுதந்திர தேவி சிலை அமெரிக்க சுதந்திர நாளான ஜூலை 4-ந் தேதி நியூயார்க் நகரை சென்றடையும். எல்லீஸ் தீவில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிலை காட்சிப்படுத்தப்படும்.

புதிய சுதந்திர தேவி சிலை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பிரெஞ்சு தூதரக தோட்டத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா???

naveen santhakumar

ஆறு வகை கொரோனா வைரஸ்: லண்டன் கிங்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு… 

naveen santhakumar

நடுரோட்டில் குளித்துக்கொண்டே பைக் ஓட்டிய வாலிபர்கள்

Admin